சபாஷ்… ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு… என்னனு தெரியுமா?

0
10
சபாஷ்… ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு… என்னனு தெரியுமா?

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களின் (Battery Operated Vehicles – BOVs) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (Registration Certificate – RC) பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

அதேபோல் பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கும் விலக்கு வழங்கப்படுகிறது. பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்தும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிப்பதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

முன்னதாக பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்தும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்குவதற்கான திட்டத்தை முன்மொழிந்து, அதற்கான வரைவு அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த மே 27ம் தேதி வெளியிட்டிருந்தது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இந்த வரைவு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள், இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரைவு அறிவிப்பு தொடர்பாக எந்தவிதமான ஆட்சேபனைகளும் வரவில்லை. இந்த சூழலில்தான் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகதான் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டே வருவதாக கூட பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ப பொதுமக்களின் கவனமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்ததை போல், பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களின் பயன்பாடு இந்த அறிவிப்பின் மூலம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக இதனையும் பார்க்கலாம். பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைந்து, பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையும் பெரிய அளவில் குறையும் என்பது இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும்.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

முன்னதாக ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒன்றிய அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டுள்ளன. இதன்கீழ் அந்தந்த மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இதன் காரணமாக வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா உள்ளிட்ட ஜாம்பவான் நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை தொடங்கவுள்ளன. டெஸ்லா நிறுவனம் ஒன்றிய அரசிடம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கேட்டுள்ளது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை தொடங்குவதாக இருந்தால் இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வை நாம் காத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் இந்தியாவில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை தொடங்கவுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவுகள் குவிந்து வரும் நிலையில், அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

ஆனால் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எவ்வளவு முன்பதிவுகள் வந்துள்ளன? என்பதை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதால், முன்பதிவு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.

சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?

இங்கே நாங்கள் தெரிவித்துள்ள அனைத்து தகவல்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டதை காட்டுகின்றன. தற்போதைய நிலையில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் பெரும் தடைக்கல்லாக உள்ளது. ஆனால் அந்த தடையையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூடிய விரைவில் தகர்க்கும் என நாம் நம்பலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here