சின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்! | Drums Shivamani praising Sarpatta Parambarai movie

0
8
சின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்! | Drums Shivamani praising Sarpatta Parambarai movie


தொய்வே இல்லை

தொய்வே இல்லை

1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 மணி நேரம் உள்ள போதும் படம் கடைசி வரை கொஞ்சமும் தொய்வை ஏற்படுத்தவில்லை.

பழைய நார்த் மெட்ராஸ்

பழைய நார்த் மெட்ராஸ்

படத்தை பார்த்த பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருமே தங்களின் எதார்த்தமான நடிப்பால் கவர்ந்துள்ளனர். 1970களில் உள்ள வட சென்னையை அப்படியே கண் முன் கொண்டுவந்துள்ளது படக்குழு.

அற்புதமான படம்

அற்புதமான படம்

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த பிரபல இசை கலைஞரான ட்ரம்ஸ் சிவமணி புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, சார்பட்டா பரம்பரை படம் அற்புதமான படம்.

கோல்டன் டேஸ்க்கு போயிட்டேன்

கோல்டன் டேஸ்க்கு போயிட்டேன்

நான் என்னுடைய பழைய நினைவுகள் மற்றும் என்னுடைய கோல்டன் டேஸ்க்கு சென்றுவிட்டேன். என்னுடைய அப்பா, கண்ணப்பன் திடல், சால்ட் கோட்டை, நட்ராஜ் தியேட்டர், நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற டோரனமெண்டுளுக்கு அழைத்து சென்றுள்ளார்.

முகமதலி வந்தபோது..

முகமதலி வந்தபோது..

பாப்புலரான பாக்ஸர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். முகமதலி வந்த போது எம்ஜிஆர் சார் அந்த டோரனமெண்டுக்கு நேரடியாக வந்தார். நான் அங்குதான் இருந்தேன் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

ஒவ்வொரு ஃபிரேமும் ஆஸம்

ஒவ்வொரு ஃபிரேமும் ஆஸம்

படத்தில் வட சென்னையை காட்டியுள்ளார்கள். என்னுடைய ஏரியா, வியாசர்பாடி. மூலக்கொத்தடம், பேசின் பிரிட்ஜ், வால்டெக்ஸ் ரோடு என அனைத்தையும் காட்டியுள்ளார்கள். அந்த பகுதியில் உள்ள ஸ்லாங் உட்பட படத்தில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமும் ஆஸம். நான் எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணினேன்.

மொத்த டீம்மும்

மொத்த டீம்மும்

இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நம்ம அடியெல்லாம் காட்டியிருக்கீங்க.. அழகான பேக் கிரவுண்ட் ஸ்கோர்.. மற்றும் ஆர்யா உட்பட மொத்த டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.. சிறந்த படம்.. இவ்வாறு ட்ரம்ஸ் சிவமணி தனது வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here