Home தமிழ் News ஆட்டோமொபைல் சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்… கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க… ஏன் தெரியுமா?

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்… கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க… ஏன் தெரியுமா?

0
சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்… கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க… ஏன் தெரியுமா?

[ad_1]

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

கார்களின் முக்கியமான பாகங்களில் ஒன்று பேட்டரி (Battery). கார் பேட்டரிகளின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிமையான வழிமுறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த டிப்ஸ்கள் உங்களுக்கும், உங்கள் காரின் பேட்டரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

கொஞ்ச தூரத்துக்காக எல்லாம் காரை எடுக்காதீங்க!

ஒவ்வொரு முறை நீங்கள் காரை ‘ஸ்டார்ட்’ செய்யும்போதும், பேட்டரி வேலை செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் பயணத்தின்போது இன்ஜின் மூலமாக ‘ரீசார்ஜ்’ ஆகி கொள்ளும். எனவே குறைவான தூரத்திற்கு மட்டும் காரை ஓட்டினால், பேட்டரியால் இழந்த சக்தியை திரும்ப பெற முடியாமல் போய் விடும். இதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால் பேட்டரி ‘வோல்டேஜ்’ கடுமையாக குறைந்து விடும்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

ஒரு கட்டத்தில் காரை ‘ஸ்டார்ட்’ செய்ய முடியாத சூழல் உருவாகி விடும். எனவே குறைவான தூரம் பயணம் செய்வதற்காக காரை எடுக்காதீர்கள். அதாவது அதிக தூரம் பயணம் செய்வதாக இருந்தால் மட்டும் காரை எடுங்கள். குறைவான தூரம் செல்வதாக இருந்தால், நடந்து செல்வது, பொது போக்குவரத்து போன்ற மாற்று வழிகளை பரிசீலனை செய்யலாம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

காரை ரொம்ப நாள் ஓட்டாம இருக்காதீங்க!

உங்கள் கார் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமலேயே இருந்தால், பேட்டரி ‘ரீசார்ஜ்’ ஆகி கொள்வதற்கு போதுமான நேரம் இருக்காது. எனவே காரை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். உங்கள் கார் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்போதுதான், சிறப்பான செயல்திறனை வழங்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

எனவே குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது 30 நிமிடம் காரை ஓட்டுங்கள். இதன் மூலம் உங்கள் கார் இன்ஜின் ‘வார்ம்-அப்’ ஆகி கொள்ளும் என்பதுடன், கார் ‘ஃப்ளூயிட்கள்’ நன்றாக ‘சர்குலேட்’ ஆகவும் செய்யும். வாரக்கணக்கில் நீங்கள் காரை பயன்படுத்தாமல் இருந்தால், அடுத்த முறை நீங்கள் காரை எடுக்கும்போது, பேட்டரிக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்பதை மறந்து விட வேண்டாம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

அடிக்கடி பேட்டரியை சுத்தம் பண்ணுங்க!

அழுக்கு மற்றும் ஈரம் போன்றவை ‘லீக்கேஜ்’ ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். அத்துடன் இவை ‘ஷார்ட் சர்க்யூட்’ ஏற்படுவதற்கும் வழிவகுக்கலாம். எனவே குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது காரின் பேட்டரியை சுத்தம் செய்யுங்கள். ‘ஸ்பான்ச்’ அல்லது உலர்ந்த துணி ஆகியவற்றின் மூலமாக பேட்டரியை சுத்தம் செய்வது மிகவும் எளிமையான விஷயம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

இன்ஜினை ‘ஆன்’ செய்யாமல் ‘லைட்’ போடாதீங்க!

இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல், ஹெட்லைட்களையோ அல்லது இன்டீரியர் லைட்களையோ நீங்கள் ‘ஆன்’ செய்தால் பேட்டரி வறண்டு போகலாம். இன்ஜின் ‘ஸ்விட்ச்-ஆஃப்’ செய்யப்பட்டிருக்கும்போது, உங்கள் கார் ஆல்டர்நேட்டர் ‘ஷட் டவுன்’ ஆகி விடும் என்பதே இதற்கு காரணம். எனவே இன்ஜின் ஓடாத சமயங்களில், எந்தவொரு எலெக்ட்ரானிக் ஆக்ஸஸெரீஸ்களையும் பயன்படுத்த வேண்டாம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

ஒவ்வொரு முறை காரை விட்டு வெளியேறும்போதும், அனைத்தும் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டுள்ளதா? (மிக முக்கியமாக லைட்கள்) என்பதை ‘செக்’ செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் கார் பேட்டரி வீணாக வறண்டு போவதை தடுக்க முடியும். அதேபோல் காரில் இருந்து வெளியேறும்போது, ‘லாக்’ செய்யவும் மறக்க வேண்டாம்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் நாங்கள் இதை கூறவில்லை. இதற்கு பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது. ஞாபக மறதியில் நீங்கள் உங்கள் காரை ‘ஓபன்’ செய்து விட்டு சென்றால், காரின் ‘கம்ப்யூட்டர் சிஸ்டம்’ தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கலாம். இது உங்களுக்கு தெரியாமலேயே, உங்கள் காரின் பேட்டரியை வறண்டு போக செய்யும்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

காரை சர்வீஸ் பண்ணுங்க!

சீரான இடைவெளிகளில் காரை ‘சர்வீஸ்’ செய்வதும் நன்மை அளிக்கும். நீங்கள் அவசரமாக எங்கேயாவது பயணம் செய்து கொண்டிருக்கும்போது, கார் திடீரென ‘பிரேக்டவுன்’ ஆவதை தடுக்க வேண்டுமென்றால், பேட்டரியை ‘டெஸ்ட்’ செய்து கொள்வது நல்லது. அடுத்த முறை காரை ‘சர்வீஸ்’ செய்வதற்கு விடும்போது, பேட்டரி நல்ல கண்டிஷனில் உள்ளதா? என்பதை ‘செக்’ செய்யும்படி மெக்கானிக்கிடம் வலியுறுத்துங்கள்.

சின்ன தப்பு பெருசா செலவு வெச்சுரும்... கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் லைட் போட்றாதீங்க... ஏன் தெரியுமா?

அத்துடன் பேட்டரி சரியாக ‘ரீசார்ஜ்’ ஆகிறதா? என்பதையும் மெக்கானிக்கை பரிசோதனை செய்து பார்க்க சொல்லுங்கள். இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள எளிமையான டிப்ஸ்களை பயன்படுத்தினாலேயே, உங்களுடைய கார் பேட்டரி நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here