சிரஞ்சீவியின் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13ல் துவங்குகிறது ! | Chiranjueevi’s Lucifer to start from August 13

0
8
சிரஞ்சீவியின் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13ல் துவங்குகிறது ! | Chiranjueevi’s Lucifer to start from August 13


லூசிஃபர் ரீமேக்

லூசிஃபர் ரீமேக்

வித்தியாசமான அதேசமயம் சமூகத்திற்கு தேவையான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்த இயக்குனர் மோகன் ராஜா இப்பொழுது தெலுங்கில் லூசிஃபர் ரீமேக்கை இயக்குகிறார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிஃபர் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை மிக பிரித்திவிராஜ் இயக்கி இயக்குனராக மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாக நடித்து வந்த பிரித்திவிராஜ் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கிய லூசிஃபர் திரைப்படம் அரசியல் பின்னணியைக் கொண்ட படமாக உருவானது.

அரசியல் மோதலை

அரசியல் மோதலை

மோகன்லால் மஞ்சு வாரியர் விவேக் ஓபராய் டோவினோ தோமஸ் என பலர் இதில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியின் மறைவுக்கு பிறகு வளர்ப்பு மகனுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்படும் அரசியல் மோதலை மிக சுவாரசியமாக காட்சிக்கு காட்சி திரில்லர் உடன் ரசிக்க வைத்திருப்பார் பிரித்திவிராஜ். இப்படத்தை ரீமேக் செய்ய பல மொழிகளிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வர இப்பொழுது தெலுங்கு ரீமேக் உறுதியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்குகிறார்.

மோகன்லால் கதாபாத்திரத்தில்

மோகன்லால் கதாபாத்திரத்தில்

தற்காலிகமாக லூசிஃபர் என்றே தெலுங்கிலும் பெயரிடப்பட்டிருக்கும் சிரஞ்சீவியின் 153வது படமாக இப்படம் உருவாகி வருகிறது இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது முதல் கட்டமாக பாடல் பதிவு பணிகளை இசை அமைப்பாளர் தமன் துவங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே டோலிவுட்டில் பரபரப்பாக இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இயக்குனர் மோகன் ராஜாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது என்ன அறிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி

ஆகஸ்ட் 13-ஆம் தேதி

இந்த நிலையில் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஒரே கட்டமாக ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது . வெறும் நான்கு மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நயன்தாரா இப்படத்தில் நடித்தால் தமிழிலும் இந்த படத்திற்கு எக்கச்சக்க மார்க்கெட் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நடிகர் சிரஞ்சீவி இப்பொழுது ஆச்சார்யா என்றபடத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட பணியில் இருக்கும் ஆச்சார்யாவை முடித்துவிட்டு லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி கலந்து கொள்ள உள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here