Home சினிமா செய்திகள் சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா… கதையை பாதியில் மறந்துட்டாங்களா? | Illogical things in Bharathi Kannamma tv serial

சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா… கதையை பாதியில் மறந்துட்டாங்களா? | Illogical things in Bharathi Kannamma tv serial

0
சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா… கதையை பாதியில் மறந்துட்டாங்களா? | Illogical things in Bharathi Kannamma tv serial

[ad_1]

எப்பதான் உண்மையை சொல்வார்

எப்பதான் உண்மையை சொல்வார்

கண்ணம்மாவிற்கு பிறக்கு இரட்டை குழந்தைகளில் ஒன்றை பிறந்த உடனேயே தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. இந்த குழந்தையை வைத்து தான் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க போவதாகவும் காரணம் சொல்கிறார். ஆனால் அந்த குழந்தைகள் வளர்ந்து 8 வயது ஆகியும் இதுவரை செளந்தர்யா குழந்தைகள் பற்றிய உண்மையை சொல்லவே இல்லை. ஒருவேளை உண்மையை சொன்னால் சீரியல் முடிந்து விடும் என்பதால் சொல்லவில்லையா இல்லை கதையை பாதியில் மறந்து விட்டார்களா என தெரியவில்லை.

செளந்தர்யா சொல்வாரா மாட்டாரா

செளந்தர்யா சொல்வாரா மாட்டாரா

ஹேமாவை கட்டாயப்படுத்தி பாரதி அமெரிக்கா அழைத்து செல்வதாக சொல்கிறார். அப்போது கூட பாரதி, ஹேமாவை தத்தெடுத்ததற்கு ஆதாரமாக இருக்கும் பேப்பரை தான் கிழித்து போடுகிறார். கிட்டதட்ட வில்லி ரேஞ்சுக்கு வசனம் வேறு பேசுகிறார். ஆனால் அப்போ கூட பாரதியிடம் உண்மையை கூறவில்லை. கதைப்படி பாரதி கோபப்படுவார் என வைத்துக் கொண்டாலும், கண்ணம்மாவிடம் கூட ஏன் செளந்தர்யா உண்மையை சொல்லவில்லை என்று தான் தெரியவில்லை.

 முழுநேர வேலையே இது தானா

முழுநேர வேலையே இது தானா

இது ஒரு புறம் என்றால், டாக்டராக வரும் பாரதி டிஎன்ஏ சோதனைக்கு தயங்குவது நம்ப முடியாததாக உள்ளது. அதுவும் அவரின் டாக்டர் தோழியாக வரும் வெண்பா, சொல்தை 8 ஆண்டுகளாக நம்பி, மனைவியை பிரிந்திருக்கிறார் என சொல்வதும் நம்ப முடியவில்லை. டாக்டர் என்று சொல்கிறார்களே தவிர பாரதி எப்போதும் டென்ஷனாக கண்ணம்மா மீது வெறுப்பு காட்டுவதையும், வெண்பா முழு நேர வில்லியாக இருப்பதையும் தான் வேலையாக செய்வதாக காட்டுகிறார்கள்.

யாருமே பார்க்கலையா

யாருமே பார்க்கலையா

வில்லி வெண்பா டிஎன்ஏ பரிசோதனை செய்ததாக காட்டும் மெடிக்கல் ஃபைல், பாரதி வீட்டில் பல நாட்களாக இருப்பதாக காட்டுகிறார்கள். அது கண்ணம்மா வீட்டிற்கு வேறு போய் வருகிறதாம். ஆனால் அந்த ஃபைலை வெண்பாவை தவிர, வேறு யாரும் திறந்து பார்க்கவேயில்லை என்பதும், இதை சஸ்பென்ஸ் என்ற பெயரில் வாரம் முழுவதும் காட்டுவது வேண்டுமென்றே சீரியலை நீட்டிப்பதாக உள்ளது.

எங்கப்பா அந்த கேரக்டர

எங்கப்பா அந்த கேரக்டர

இதற்கிடையில் வில்லிக்கு வில்லனாக வரும் துர்க்கா, அவ்வப் போது மட்டும் வந்து தலை காட்டுகிறார். மற்ற நேரங்களில் அந்த கேரக்டரை மறந்து விடுகிறார்களா என தெரியவில்லை. வெண்பாவை ஒரு தலையாக காதலிப்பதாகவும், அவரை கடத்தி சென்று, அடைத்து வைத்திருப்பதாக காட்டினார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர் என்ன ஆவார் என்றே தெரியவில்லை.

பெயரை கேட்கவே இல்லையே

பெயரை கேட்கவே இல்லையே

8 வயது ஆகி, பள்ளியில் சேர்க்கும் வரை லட்சுமி அப்பாவின் பெயரையும் , பாஸ்போர்ட் அலுவலகம் செல்லும் வரை ஹேமா அம்மாவின் பெயரையும் கூட கேட்காமல் இருப்பதாக கூறுவது நம்பும் படியாக இல்லை. சமையல் அம்மா என கண்ணம்மா மீது அதீத பாசம் வைத்தும் உருகும் ஹேமா, அவரின் உண்மையான பெயரை ஒரு முறை கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பது லாஜிக் ரொம்பவே இடிக்கிறது.

இத்தனை அபத்தங்கள், சொதப்பல்கள் இருந்தாலும் விஜய் டிவி சீரியல் ரேட்டிங்கில் பாரதி கண்ணாம்மா முதலிடத்தில் இருப்பது தான் மக்களின் ரசனையை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here