சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4ம் பாகம் உருவாகிறதா? | Will Sundar C Direct Aranmanai 4?

0
45
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4ம் பாகம் உருவாகிறதா? | Will Sundar C Direct Aranmanai 4?


அரண்மனை பாகங்கள்

அரண்மனை பாகங்கள்

தமிழ் சினிமாவிற்கும் பாகங்களுக்கும் ராசி இல்லை என்ற ஒரு டாக் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்பவே இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதில் சில திரைப்படங்கள் மட்டும் வெற்றி பெற்று வருகின்றன அந்த வரிசையில் அரண்மனை பாகங்களும்.

அதே அளவிற்கு

அதே அளவிற்கு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி கலகலப்பான திரைப்படங்களை இயக்குவதில் பெயர் போனவர். தன்னுடைய திரைப்படங்களில் காமெடிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு கொஞ்சமும் சலைக்காமல் கிளாமர் இருக்கும் .

ஆர்யா ஹீரோவாக

ஆர்யா ஹீரோவாக

அன்று முதல் இன்று வரை காமெடியில் ஹிட் படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி இப்பொழுது பேய் படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளிய நிலையில் இப்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்து வர ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ,சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

யோகி பாபு மனோபாலா விவேக் ஆகியோர் இதில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க சுந்தர் சியும் வழக்கம் போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்பொழுது அரண்மனை 3 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அதன் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு வைரல் ஆனது.

அரண்மனை 4வது பாகம்

அரண்மனை 4வது பாகம்

இப்பொழுது கிளைமாக்ஸ் காட்சி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 1.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அரண்மனை 3 வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், சுந்தர் சி அரண்மனை நான்காவது பாகத்தையும் இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது . அரண்மனை 3 ரிலீஸ் ஆன பிறகு இதைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here