சூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர் | Kannada Actor kiccha Sudeep praises suriya

0
20
சூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர் | Kannada Actor kiccha Sudeep praises suriya


சூரரைப்போற்று

சூரரைப்போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார்.

சூர்யான அழகான நடிப்பு

சூர்யான அழகான நடிப்பு

இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் இருந்தது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் காட்சி நெஞ்சை பதறவைத்தது. மேலும், விமான நிலையத்தில் பணம் கேட்டு அலைந்த காட்சி கண்ணீரை வரவைப்பதாக இருந்தன. இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறினர்.

இந்நிலையில், கன்னடி நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சூரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளார்.

சூரரைப்போற்று படத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஒரு பார்வை | Detailed Analysis

சூர்யாவை பாராட்டினார்

சூர்யாவை பாராட்டினார்

இந்நிலையில் கன்னடி நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் , சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்தேன். சூர்யாவின் நடிப்பு மிகவும் மெச்சும்படி இருந்தது, சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் நடிக்க சூர்யா முன்வந்ததற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று கன்னட நடிகர் சுதீப், சூர்யாவை மனதார பாராட்டினார்.

வில்லனாக நடித்தார்

வில்லனாக நடித்தார்

கன்னட நடிகர் கிச்சா சுதீப் நானியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான் ஈ திரைப்படத்திலும், விஜய்யின் புலி படத்திலும் வில்லனான நடித்தவர் கிச்சா சுதீப்.இவர் கன்னடத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here