செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

0
12
செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு அதன் பிரபலமான ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. கமுக்கமாக நடைபெற்று வந்த இந்த பணிகள், வித்தியாசமான தோற்றத்தில் ஹிமாலயன் பைக் ஒன்று சமீபத்தில் சோதனை செய்யப்பட்டதில் வெளிச்சத்திற்கு வந்தது.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

இந்த நிலையில் தற்போது முற்றிலும் சாலை பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு வரும் ஹிமாலயனின் புதிய வேரியண்ட்டின் தோற்றம் இவ்வாறுதான் இருக்கும் என பைக் ஒன்றின் படம், 69_திவண்டர்லஸ்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

Image Courtesy: 69_thewanderlust/Instagram

அதனை தான் மேலே காண்கிறீர்கள். என்னதான் இவ்வாறு ஸ்பை படங்கள் வெளியாகி கொண்டிருந்தாலும் இவ்வாறான ஹிமாலயன் பைக் குறித்து ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வரையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

தற்போது வெளியாகியுள்ள படத்திலும் சரி, அல்லது இதற்கு முன்னர் வெளியாகி இருந்த இதன் சோதனை ஓட்ட படங்களிலும் சரி, இரண்டிலும் பைக் கிட்டத்தட்ட தற்சமயம் விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கையே ஒத்து காணப்படுகின்றது.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

இருப்பினும் சில வெளிப்பக்க பேனல்கள் நீக்கப்பட்டும், சில பேனல்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் சாலை-சார்ந்த வெர்சனும் வாடிக்கையாளர்களை கவரும் என்பது உறுதி.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

குறிப்பாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ள பைக் அட்டகாசமான தோற்றத்தில் உள்ளது. அதிலும் இளம் பழுப்பு நிற பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு அருகில் வழங்கப்பட்டுள்ள ‘411′ என்கிற ஸ்டிக்கர் இளம் தலைமுறையினரை வெகுவாக வசீகரிக்கும்.

செம்மையா வரப்போகுது!! ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு!

ஹிமாலயன் அட்வென்ச்சரில் வழங்கப்படும் பெரிய அளவிலான முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி முற்றிலுமாக இந்த சாலை-சார்ந்த வெர்சனில் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்சக்கரம் அளவில் சிறியதாக இருப்பதையும் கவனிக்க முடிகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here