சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

0
17

காற்றை மாசுப்படுத்துவதிலும், சுற்று சூழலை சீர்குலைப்பதிலும் எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. இதன் காரணத்தினால்தான் உள்ளெரிப்பு எஞ்ஜின் (internal combustion engine) வாகனங்களை, அதாவது, பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து நீக்கும் பணியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

மேலும், அவற்றிற்கு பதிலாக மின் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில், பூஜ்ஜியம் உமிழ்வை, அதாவது, மாசே வெளிப்படுத்தாத ஓர் வாகனத்தை ‘வாகன மாடிஃபிகேஷன்’ வாயிலாக இளைஞர்கள் சிலர் உருவாக்கியிருக்கின்றனர்.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

லைஃப் ஓடி எனும் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்களே வாகன மாடிஃபிகேஷனை செய்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஓர் மிதிவண்டியையும், ஹோண்டா சிவிக் காரையும் இணைத்து அவ்வாகனத்தை உருவாக்கியிருக்கின்றனர். சிவிக் காரில் இருந்த பெட்ரோல் எஞ்ஜின் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சைக்கிளை பெடல் செய்தால் கார் இயங்கும் வகையில் மாற்றங்களை அவர்கள் செய்திருக்கின்றனர்.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இதனால் ஹோண்டா சிவிக் சைக்கிளால் இயங்கும் காராக மாறியிருக்கின்றது. இருவர் அமர்ந்து பெடல் செய்யும் வசதிக் கொண்ட சைக்கிளை இளைஞர்கள் இதற்காக பயன்படுத்தியிருக்கின்றனர். என்னதான் இருவர் சேர்ந்து பெடல் செய்து காரை இயக்கினாலும் மணிக்கு 3.22கிமீ வேகத்திலேயே இந்த காரால் பயணிக்க முடியும்.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இது நாம் நடப்பதைவிட மிக குறைவான வேகம். இத்தகைய திறன் கொண்ட சிவிக் கரையே இளைஞர்கள் யுட்யூப் வீடியோவிற்காக உருவாக்கியிருக்கின்றனர். சைக்கிளின் பின் பக்க வீல் நீக்கப்பட்டு, அதன் செயின் நேரடியாக காரின் வீலை இயக்கும் வகையில் இணைக்கப்பட்டிருக்கின்றது.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

காரின் அதிக எடை மற்றும் பெரிய உருவம் உள்ளிட்ட காரணங்களால் வழக்கமான சைக்கிளின் இயக்கத்தைவிட இது குறைந்த நேரத்தில் இயங்குகின்றது. சைக்கிளைக் கொண்டு கார் இயங்கினாலும், காருக்குள் ஒருவர் அமர்ந்தால் மட்டுமே அதனை இயக்க முடியும். ஆம், அனைத்து கன்ட்ரோல்களும் காருக்கு உள்ளேவே இடம் பெற்றிருக்கின்றன.

சைக்கிளால் இயங்கும் ஹோண்டா சிவிக்! இதுவரை நாம் கண்டிராத விநோத மாடிஃபிகேஷன் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

ஆகையால், மூவர் அல்லது இருவர் இருந்தால் மட்டுமே இந்த வாகனத்தை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதுமட்டுமே இந்த காரில் இருக்கும் பெரிய சிக்கலாக உள்ளது. அதேசமயம், இந்த விநோத மாடிஃபிகேஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Image Courtesy: Life OD

குறிப்பாக, சாலையில் இந்த வாகனம் செல்லும்போது அநேகரின் பார்வையை தன் பக்கம் திருப்பும் வகையில் இருக்கின்றது. அதேசமயம், விநோத மாடிஃபிகேஷன் காரணத்தினால் போலீஸாரிடத்தில் சிக்கும் நிலை அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும், அவர்கள் உரிய காரணங்களைக் கூறி அங்கிருந்து எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தப்பியிருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here