Wednesday, December 8, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்சையத் முஷ்டாக் அலி கோப்பை ஃபைனல் : டாஸ் வென்ற தமிழ்நாடு பவுலிங் தேர்வு!

சையத் முஷ்டாக் அலி கோப்பை ஃபைனல் : டாஸ் வென்ற தமிழ்நாடு பவுலிங் தேர்வு!


சையத் முஷ்டாக் அலி கோப்பை ஃபைனல் : டாஸ் வென்ற தமிழ்நாடு பவுலிங் தேர்வு!

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் ஷங்கர், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு அணி அந்த பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் இந்த போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி விளையாடிய கடந்த 5 போட்டிகளில் கர்நாடக அணி நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 

சாய் சுதர்ஷன், ஹரி நிஷாந்த், சஞ்சய், நாராயண் ஜகதீசன் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர் (கேப்டன்), முகமது, சாய் கிஷோர், முருகன் அஷ்வின், நடராஜான், ஹரி நிஷாந்த், வாரியர், ஷாருக் கான் ஆகிய 11 வீரர்கள் இந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

puthiyathalaimurai.com

Web Team

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds