ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள் | Actress Janani Iyer removes her caste identity from name

0
16
ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள் | Actress Janani Iyer removes her caste identity from name


ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள் | Actress Janani Iyer removes her caste identity from name

எனக்கு ஜாதி வேண்டாம்

டிவிட்டரில் இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டு அத்தனை பேரையும் அசரடித்துள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது.. என்றும் ஒற்றுமையுடன்.. ஜனனி என்று அவர் போட்டுள்ள இந்த போஸ்ட் பலரது பாராட்டுக்களைக் குவித்துள்ளது. அதேசமயம், பலர் குசும்புத்தனமாக கமெண்ட் பண்ணவும் தவறவில்லை.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

பிரபலங்கள் பலரும் ஜனனியின் இந்த ஜாதி துறப்பை வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ரசிகர்களும் ஜனனியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை ஜனனி விளக்கவில்லை. மாறாக அதுகுறித்து கேட்போருக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு கடந்து செல்கிறார்.

அதிகரிக்கும் ஜாதி வெறி

அதிகரிக்கும் ஜாதி வெறி

சமீப காலமாக ஜாதியை பச்சையாகச் சொல்லி அனுதாபம் தேடுவதும், கெத்து காட்டுவதும், பெருமை பேசிக் கொள்வதும் ஒரு பேஷனாக மாறி விட்டது. அது இந்த ஜாதி அந்த ஜாதி என்று இல்லை. பல ஜாதியினரும் இப்போதெல்லாம் ஜாதிப் பெருமை பேசுவதை கவுரமாக கருத ஆரம்பித்து விட்டனர். மனசுக்குள் ஊறிக் கிடக்கும் ஜாதி வெறியை வெளிப்படையாகவே வெளிக்காட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

கவசமாகும் ஜாதி

கவசமாகும் ஜாதி

அதிலும், ஏதாவது தப்பு செய்தால், எதிலாவது சிக்கிக் கொண்டால் உடனே ஜாதியை தூக்கிக் கொண்டு வந்து கவசமாக பயன்படுத்துவதற்காக பலர் வெட்கப்படுவதே இல்லை. ஜாதியை முன்னிறுத்தினால் தப்பி விடலாம் என்ற தப்புக் கணக்கே இது.

பாராட்டலாமே

பாராட்டலாமே

இந்த சூழ்நிலையில் தனது பெயரிலிருந்து ஜாதியை தூக்கி வீசியிருக்கும் ஜனனியின் செயல் ஆச்சரியமானது அல்ல.. மாறாக பாராட்டப்பட வேண்டியது. நிறைய மலையாள நடிகர், நடிகைகள் இப்படித்தான் ஜாதிப் பெயருடன் சுற்றுகிறார்கள். அவர்களும் ஜனனி பாணியில் ஜாதியைத் தூக்கிப் போடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here