ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் | gayathrie heroine for gvprakash in seenu ramasamy film

0
7
ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் | gayathrie heroine for gvprakash in seenu ramasamy film


ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சீனு ராமசாமி. இதனைத் தொடர்ந்து தான் எழுதியுள்ள புதிய கதையின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தேனியைச் சுற்றியுள்ள பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சீனு ராமசாமியின் முந்தைய படமான ‘மாமனிதன்’ படத்தின் நாயகியும் காயத்ரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதற்கு பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு தான், தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here