ஜெல்லி மில்க் ஷேக் | Jelly Milk Shake

0
16
ஜெல்லி மில்க் ஷேக் | Jelly Milk Shake


தேவையான பொருட்கள்

ஜெலடின் – 1 டேபிள் ஸ்பூன்,
சுடு தண்ணீர் – 1 கப்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
ஃபுட்கலர் – 2 துளிகள்.

ஜெல்லி செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஜெலடினைப் போட்டு சுடுதண்ணீர் ஊற்றி நன்கு கரைக்கவும். பின் அதில் சர்க்கரை ஃபுட்கலர் சேர்த்து ஆறியதும் ஜெல்லி டிரேயில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் 2 அல்லது 3 மணி நேரம் வைத்தால் ஜெல்லி ரெடி.

செய்முறை

ஜெல்லி – 3 டேபிள் ஸ்பூன், குளிர்ந்தபால் – 1 கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஜெல்லி – அடியில் தூவ. பொடியாக நறுக்கிய ஜெல்லியை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பின் அதில் பால், சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்கு அடித்து வைக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில் பொடியாக நறுக்கிய ஜெல்லியை போட்டு அதன்மேல் ஜெல்லி மில்க் ஷேக்கை ஊற்றி பரிமாறவும். சுற்றிலும் ஜெல்லியை வைத்து அலங்கரித்து நடுவில் ஜூஸை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here