டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

0
15

இந்திய சந்தையில் வரும் ஆண்டுகளில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

டாடா நிறுவனம் ஏற்கனவே ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த சூழலில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 500 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரில் ஜிப்ட்ரான் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்படும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் இதே பவர்ட்ரெயின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட, அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரில் கூடுதல் ரேஞ்ச் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் பேட்டரி தொகுப்பை டாடா வழங்கலாம்.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்த புதிய பேட்டரி தொகுப்பு 20-40 சதவீதம் அதிக ரேஞ்ச் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை விட பெரிய பேட்டரி தொகுப்பை அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சார்ஜ் ஏற்றும் நேரமும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஆனால் சார்ஜிங் ரேட்டை மேம்படுத்துவதற்காக சார்ஜிங் ஹார்டுவேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏதாவது மாற்றங்களை செய்யுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 127 பிஎச்பி எலெக்ட்ரிக் மோட்டார் உடன், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். இதற்கிடையே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா? வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் சலுகைகள் கிடைக்கும் என்பதால், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here