டாடா செய்த தரமான சம்பவம்… ஒரே நாள், ஒரே நகரம் – புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

0
13
டாடா செய்த தரமான சம்பவம்… ஒரே நாள், ஒரே நகரம் – புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்றழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ், புதிதாக 8 ஷோரூம்களை திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஷோரூம்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே நகரத்தில் திறக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கின்றது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

இந்த செயலினால் டாடா நிறுவனம் ஷோரூம் திறப்பதில் புதிய வரலாற்றை படைத்துள்ளது. அனைத்து புதிய ஷோரூம்களும் குஜராஜ் மாநிலம், அஹமதாபாத் நகரத்திலேயே திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், அஹமதாபாத் நகரவாசிகளால் எளிதில் டாடா கார்களை வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

மாநிலத்தில் தனது விற்பனை நெட்வொர்க்கை கூடுதலாக்கும் வகையில் இந்த தரமான சம்பவத்தை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது. குஜராத்தில் சமீப காலமாக டாடாவின் தயாரிப்புகளுக்கு கணிசமாக வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

இதனடிப்படையிலேயே அங்குள்ள மக்களை மேலும் கவரும் வகையில் டாடா தனது விற்பனை நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்திருக்கின்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 95 சதவீதம் விற்பனை வளர்ச்சியை டாடா குஜராத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

இந்த நிலையிலேயே மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, டாடா நிறுவனம் விற்பனை சேவையை ஆன்லைன் வாயிலாகவும் செய்து வருகின்றது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவரும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகின்றது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஷோரூம்களை திறப்பதன் வாயிலாக மட்டுமின்றி புதிய தயாரிப்புகள் வாயிலாகவும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் விரைவில் புதிதாக எச்பிஎக்ஸ் எனும் மைக்ரோ ரக எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்திவிட்ட நிலையில் தற்போதே உற்பத்திக்காக அனுப்பி வைத்திருக்கின்றது. அதாவது, டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் உற்பத்தி பணிகளை தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் மைக்ரோ எஸ்யூவி ரக கார் சந்தையை எச்பிஎக்ஸ் பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா செய்த தரமான சம்பவம்... ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!

டாடா எச்பிஎக்ஸ் விற்பனைக்கு வரும்போது ஹார்ன்பில் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கேயூவி என்எக்ஸ்டி, மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கேஸ்பர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here