டாஸ் வென்றார் தவண்: இந்திய அணியில் 6 மாற்றங்கள்;5 அறிமுகம் | SL vs Ind, 3rd ODI: Dhawan wins toss, elects to bat; Samson and Sakariya make debut

0
13
டாஸ் வென்றார் தவண்: இந்திய அணியில் 6 மாற்றங்கள்;5 அறிமுகம் | SL vs Ind, 3rd ODI: Dhawan wins toss, elects to bat; Samson and Sakariya make debutகொழும்பு நகரில் இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவண் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளநிலையில் 3-வது போட்டி இன்று நடக்கிறது. இந்தத் தொடர் முடிந்தபின் டி20 தொடர் நடைபெற உள்ளது.

3-வது போட்டியில் இந்திய அணியில் 6 மாற்றங்கள், 5 வீரர்கள் அறிமுகமாகின்றனர். இந்திய அணியில் சஞ்சு சாம்ஸன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹர், சேத்தன் சக்காரியா ஆகியோர் அறிமுகமாகின்றனர். இது தவிர நவ்தீப் ஷைனியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் ராகுல் திராவிட் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று திட்டமிட்டதால், சேத்தன் சக்காரியா, ராணா, சாம்ஸன், கவுதம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேவ்தத் படிக்கல், கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைக்கவி்ல்லை என்பது வருத்தம்தான்.

நிதிஷ் ராணா ஆப்ஃஸ்பின்னர் என்பதால் பந்துவீசவும் முடியும். ஐபிஎல் தொடரில் பந்துவீசி ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளையும் ராணா வீழ்த்தியுள்ளார்.

வேகப்பந்துவீச்சுக்கு சக்காரியா, ஷைனி, ஹர்திக் பாண்டியா மூவரும், சுழற்பந்துவீச்சுக்கு கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹர், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ஷிகர் தவண்(கேப்டன்), பிரித்வி ஷா, சஞ்சு சாம்ஸன், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, கே.கவுதம், ராகுல் சஹர், நவ்தீப் ஷைனி, சேத்தன் சக்காரியா.

இலங்கை விவரம்:

ஆவேஷ் பெர்னான்டோ, மினோத் பனுகா, பனுகா ராஜபக்சே, தனஞ்சயா டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் சனகா(கேப்டன்), ரமேஷ் மென்டிஸ், கருணாரத்னே, சமீரா, அகிலா தனஞ்சயா, பிரவின் ஜெயவிக்ரமா

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here