தமிழ் Newsஆட்டோமொபைல்டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால...

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு… விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்…

-

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இந்தியாவில் எலக்ட்ரிக் பை-சைக்கிள்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனாலேயே பல புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தையில் தோன்றியுள்ளன. அதேநேரம், முன்பு பை-சைக்கிள்களை விற்பனை செய்துவந்த நிறுவனங்களும் தங்களை எலக்ட்ரிக் பை-சைக்கிள்களுக்கு அப்டேட் செய்து கொண்டுள்ளன.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இந்த வகையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து உருவானதுதான் ஹீரோ லெக்ட்ரோ. இந்த பிராண்டில் இருந்து பல எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனையில் உள்ள நிலையில், தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எச்3 மற்றும் எச்5 என மேலும் இரு புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய இ-சைக்கிள்கள் அவற்றின் மிக குறைந்த விலைகளை ஹைலைட்டாக முன்னுறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

ஏனெனில், புதிய ஹீரோ லெக்ட்ரோ எச்3 மற்றும் எச்5 எலக்ட்ரிக் சைக்கிள்களின் விலைகள் முறையே ரூ.27,499 மற்றும் ரூ.28,499 மட்டுமே ஆகும். இதில் எச்3 எலக்ட்ரிக் சைக்கிளை பிளிஸ்ஃபுல் கருப்பு-பச்சை மற்றும் பிளாஸிங் கருப்பு-சிவப்பு நிறத்திலும், எச்8 எலக்ட்ரிக் சைக்கிளை க்ரோவி க்ரீன் மற்றும் க்ளோரியஸ் க்ரே நிறத்திலும் வாங்கலாம்.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

காற்றின் போக்கிற்கு ஏற்ப இயங்குவதற்கும், சிறப்பான சவுகரியத்தை வழங்கும் விதத்திலும் ஸ்மார்ட்டான பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள்கள் புதிய ரைடு ஜியோமெட்ரி வடிவியலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான சைக்கிள் பாகங்கள் அனைத்தும் GEMTEC என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் தனது அறிக்கையில் ஹைலைட்டாக சுட்டிக்காட்டியுள்ளது.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

புதிய எச்3 மற்றும் எச்5 இ-சைக்கிள்கள் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை ஆகும். முதல்முறையாக எலக்ட்ரிக் சைக்கிளை வாங்குவோரை மனதில் வைத்து இந்த புதிய சைக்கிள்களில் அசத்தலான சவுகரிய அம்சங்களை ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எளிமையாக அணுகக்கூடிய சார்ஜிங் துளைகளை சொல்லலாம்.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இந்த இ-சைக்கிள்கள் அதி-வலிமையான கார்பன் இரும்பு ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஃப்ரேமிற்குள் பொருத்தப்பட்டுள்ள ஐபி67 சான்றளிக்கப்பட்ட லித்தியம்-இரும்பு பேட்டரி ஆனது நீரினால் பாதிப்படையாதது ஆகும். இதனால் புதிய எச்3 மற்றும் எச்5 எலக்ட்ரிக் சைக்கிள்களை எந்தவொரு வானிலையிலும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், இவற்றின் பேட்டரிகள் மண் & தூசிகளினாலும் சேதமடையாத வகையில் பொருத்தப்பட்டுள்ளதாக ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இதனால் புதிய ஹீரோ லெக்ட்ரோ எச்3 மற்றும் எச்5 எலக்ட்ரிக் சைக்கிள்கள் தினந்தோறும் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றவைகளாக பார்க்கப்படுகிறது. விலை மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், எச்3 மற்றும் எச்8 எலக்ட்ரிக் சைக்கிள்களில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அன்றாட நகர்புற பயணங்களுக்கு மட்டுமின்றி, கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் இந்த எலக்ட்ரிக் சைக்கிள்கள் உகந்தவைகளாக இருக்கும்.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

புதிய ஹீரோ லெக்ட்ரோ எச்3 மற்றும் எச்5 இ-சைக்கிள்களில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஸ்மார்ட் எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் 250 வாட்ஸ் BLDC எலக்ட்ரிக் மோட்டார் மென்மையான & நம்பகமான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. சைக்கிளின் பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக சைக்கிளை மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்க வைக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

எலக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைப்பதற்காக பொருத்தப்படும் 5.8 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரியை 4 மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட முடியும். அந்த முழு சார்ஜை உபயோகித்து பெடல் செய்யாமலேயே சைக்கிளில் கிட்டத்தட்ட 30கிமீ தொலைவிற்கு இயக்க முடியும். விருப்பப்படுவோர் இந்த எலக்ட்ரிக் சைக்கிள்களை ஹீரோ லெக்ட்ரோ நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டிஸ்க் பிரேக்ஸ் இருக்கு... விலையும் ரொம்ப கம்மி!! ஹீரோவின் பண்டிகை கால புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாகவும் இந்த புதிய இ-சைக்கிள்களை உங்களால் சொந்தமாக்கி கொள்ள முடியும். ஏற்கனவே கூறியதுதான், ஹீரோ சைக்கிள்ஸின் இ-சைக்கிள் பிராண்டான ஹீரோ லெக்ட்ரோ ஆனது இந்தியாவில் விற்பனையாகும் மொத்த எலக்ட்ரிக் சைக்கிள்களில் கிட்டத்தட்ட 70 சதவீத பங்கை கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

The best laptop for telecommuting and for students

Simple as it is, this computer has it all and its performance is ten. I was a Windows...

That area is not only a beauty!… Reshma fans are hooked on charm…

Actress Reshma is mixing in serials, movies and web serials. Pushpa became popular with fans through a...

ஷாட்களுக்கு பயப்படுகிறீர்களா? அணியக்கூடிய ரோபோ உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும்

புதிய ரோபோ விரும்பத்தகாத மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளும் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.மென்மையான ரோபோவை அணிவதன் மூலம் மருத்துவ சிகிச்சையின் போது நோயாளியின் அனுபவத்தை மேம்படுத்த...

வரிசுவில் சிலம்பரசனுக்கு கேமியோ இல்லை!

தீ தளபதி எண் வெளியான பிறகு, சிலம்பரசன் டி.ஆரும் வாரிசு படத்தில் கேமியோவாக நடிக்கிறார் என்று பல செய்திகள் வந்தன, ஆனால் இப்போது, ​​​​அந்த...

A collection of interesting events from yesterday’s Qatar World Cup! | FIFA WorldCup Round Up 2022 about Ronaldo’s upset

A 21-year-old player named Gonzalo Ramos scored a hat-trick in the round of 16 match between...

Oh, I don’t know what I’m looking at!..Poonam Bajwa showing pittu pita on the beach…

Poonam Bajwa is one of those actresses who came to Tamil cinema many years ago but disappeared without...

Must read