“டி20ஐ பொறுத்தவரை கோலியை விட தோனிதான் பெஸ்ட் கேப்டன்” – மைக்கல் வாகன் | Virat Kohli Better in Test But MS Dhoni Best Ever T20 Captain says Michael Vaughan | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0
14

டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் கோலி சிறந்த கேப்டனாக இருக்கலாம், ஆனால் டி20களில் தோனிதான் பெஸ்ட் கேப்டன் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்.

இது குறித்து பேசிய மைக்கல் வாகன் “தோனிதான் சிறந்த டி20 கேப்டன். அவர் இந்திய அணிக்காக கொண்டு வந்ததெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் டி20, ஒருநாள் போட்டிகளில் தோனியே சிறந்தவர்.” என்றார்.

image

இங்கிலாந்து – இந்தியா இடையே நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய அவர் “இங்கிலாந்து தொடரை கைப்பற்றும். ஒவ்வொரு முறை இங்கிலாந்து இந்தியாவுக்கு செல்லும்போதும் மோசமாக தோற்கும். அதேபோல இந்தியாவுக்கும் இங்கிலாந்து வரும்போது நடக்கும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் டியூக் பந்தில் தோற்கடிப்பது கடினம்” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடைபெற இருக்கிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here