டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

0
18
டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இத்தகைய டெலிவிரி பணிகளுக்காகவே பிரத்யேகமாக யுலு நிறுவனம் டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இதனாலேயே சில உணவு/பொருட்களை டெலிவிரி செய்யும் நிறுவனங்களுடன் யுலு நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த கூட்டணியின் விளைவாக பெங்களூர், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள டெலிவிரி நிறுவனங்கள் சிலவற்றிற்கு முதல்கட்டமாக வருகிற டிசம்பர் மாதத்தில் 10,000 யுலு டெக்ஸ் இ-ஸ்கூட்டர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இத்தகைய எலக்ட்ரிக் வாகனம் டெலிவிரி மேன்களின் சோர்வை பெரிய அளவில் குறைக்கும் என்பது மட்டுமில்லாமல், டெலிவிரி பயணங்களுக்கு ஆகும் செலவையும் கிட்டத்தட்ட 35%-இல் இருந்து 40% வரையில் குறைக்கும்.

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இவற்றுடன் பூஜ்ஜிய-மாசு உமிழ்வு வாகனமாக இந்த யுலு ஸ்கூட்டர் காற்று மாசுவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். டெக்ஸ் இ-ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 60கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என யுலு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

யுலு டெக்ஸில் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த இ-ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும். இதனால் இந்த இ-ஸ்கூட்டரை ஓட்ட ஓட்டுனர் உரிமம் எதுவும் தேவையில்லை.

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பொருட்களை வைத்து செல்ல ஏற்றதாக 12 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்லும் திறனை டெக்ஸ் இ-ஸ்கூட்டர் பெற்றுள்ளது. யுலு இவி சேவை நிறுவனம் தற்சமயம் இந்தியா முழுவதும், வெவ்வேறான மெட்ரோ நகரங்களுக்கு அதன் சந்தையை விரிவுப்படுத்தி வருகிறது.

டெலிவிரி பணிகளுக்கு ஏற்ற வாகனம்!! 60கிமீ ரேஞ்ச் உடன் யுலு டெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வருட தயாரிப்பை 10,000 யூனிட்களில் இருந்து 50,000 யூனிட்களாக அதிகரிக்க தீவிரமாக பணியாற்றிவரும் யுலு நிறுவனம் அதன் சந்தை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக பஜாஜ் ஆட்டோவுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளவுள்ளது.

தற்போதைய கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்ற லாஸ்ட்-மைல் டெலிவிரி ஸ்கூட்டரையே யுலு தயாரித்து வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற 5-இல் இருந்து 6-இல் இ-ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here