டைம் சரியில்லை.. பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்! | James Bond movie ‘No Time to Die’ release further delayed

0
52
டைம் சரியில்லை.. பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்! | James Bond movie ‘No Time to Die’ release further delayed


டேனி பாய்ல்

டேனி பாய்ல்

இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக். படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாய்ல் இயக்குவதாக இருந்தது.

டேனியல் கிரேக்

டேனியல் கிரேக்

கருத்து வேறுபாடு காரணமாக, அவர் விலகினார். பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்புத் தரப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியவர். இதற்கிடையே டேனியல் கிரேக் அளித்த பேட்டியில், இனி பாண்ட் படத்தில் நடிக்க மாட்டேன், அது முடிந்துவிட்டது என்று தெரிவித்து இருந்தார்.

ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்பு

இவர், கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருந்தார். இந்த படம், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக வேண்டியது. சில காரணங்களில் இதன் ரிலீஸ் முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

கொரோனா காரணமாக தள்ளிப் போனது. மேலும் சில முறை இதன் ரிலீஸ் போனது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எம்ஜிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் மீண்டும் இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘நோ டைம் டு டை’ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாயின. அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்திருந்தது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here