தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் பட ஷூட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. ஏன் அதுக்குள்ள என்னாச்சு? | Production for Netflix’s ‘The Gray Man’ paused indefinitely

0
17
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் பட ஷூட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. ஏன் அதுக்குள்ள என்னாச்சு? | Production for Netflix’s ‘The Gray Man’ paused indefinitely


ரூஸோ பிரதர்ஸ்

ரூஸோ பிரதர்ஸ்

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இந்த பிரமாண்ட படத்தில், தனுஷின் கேரக்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ‘அவென்சர்ஸ்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்குகின்றனர்.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

இதில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். இதை நெட்பிளிக்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இதை உறுதி செய்த தனுஷ், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எக்ஸ்ட்ரா ஆர்டினரி

எக்ஸ்ட்ரா ஆர்டினரி

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கவுரவம் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள், தனுஷை கொண்டாடினர். இதையடுத்து #TheGrayMan என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. இதற்கு முன் ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ என்ற ஆங்கில படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்பு

இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் அமெரிக்காவில் தொடங்க இருந்தது. இந்நிலையில் இந்நிலையில் இதன் ஷூட்டிங் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

ஷூட்டிங்கில், அதிகமானவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இதன் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தெற்கு பகுதியில் கடற்கரை அருகே இந்தப் படத்துக்கு அரங்கம் அமைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸுக்கு ரெடி

ரிலீஸுக்கு ரெடி

தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இப்போது அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here