தலைவி படம் ஆகஸ்ட்டில் ரிலீசா…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா | Kangana Ranaut puts an end card for Thalaivi release rumours

0
7
தலைவி படம் ஆகஸ்ட்டில் ரிலீசா…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா | Kangana Ranaut puts an end card for Thalaivi release rumours


தலைவி அரசியல் படமா

தலைவி அரசியல் படமா

தலைவி படம் வெறும் அரசியல் படமாக மட்டும் இல்லாமல் நடிகையாக இருந்து அரசியல் தலைவராக வளர்ந்த ஜெயலலிதாவின் முன்னுதாரணமான வாழ்க்கை பயணத்தை பற்றி சொல்வதாக எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

யார் ரோலில் யார்

யார் ரோலில் யார்

கருணாநிதியாக நாசரும், சசிகலாவாக பூர்ணாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றன.

தலைவி ஆகஸ்ட்டில் ரிலீசா

தலைவி ஆகஸ்ட்டில் ரிலீசா

தியேட்டர்கள் திறக்க தாமதமாகி வருவதால் பல படங்களில் ஒடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதனால் தலைவி படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், ரிலீசாக போவது ஓடிடி.,யிலா அல்லது தியேட்டரிலா என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

வதந்திகளை நம்ப வேண்டாம்

வதந்திகளை நம்ப வேண்டாம்

இந்நிலையில் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள கங்கனா, தலைவி படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அதனால் தலைவி ரிலீஸ் பற்றிய வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள். நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கங்கனாவின் ட்விட்டர் கணக்கை சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் நீக்கியதால், இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை கங்கனா பகிர்ந்துள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here