தாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி! வைரல் போட்டோஸ் ! | Sai Pallavi and family celebrate their 85 year old grandfather

0
24
தாத்தாவின் 85வது பிறந்தநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடிய சாய் பல்லவி! வைரல் போட்டோஸ் ! | Sai Pallavi and family celebrate their 85 year old grandfather


புன்னகை ததும்ப

புன்னகை ததும்ப

சிவந்த கன்னம் ,முகத்தில் எப்போதும் புன்னகை என்றால் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது சாய் பல்லவியின் முகம் தான் .துரு துரு பேச்சும் ,எதார்த்தமான நடிப்பும் கொண்டவர்தான் இவர்.தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்துகொண்டு இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

பிரேமம்

பிரேமம்

தென்னிந்தியாவில் அனைவரும் விரும்பக்கூடிய மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி ஆரம்பத்தில் படங்களில் சிறுசிறு வேடங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர். அதன் பிறகு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான இந்த திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக சாய்பல்லவி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரே படத்தின் மூலம் வசப்படுத்தினார்.இந்த மாதிரியான டீச்சர் நமக்கு அமையவில்லையே என்று நினைக்காத இளைஞர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அந்த அளவுக்கு தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

மலர் டீச்சர்

மலர் டீச்சர்

பிரேமம் படத்தில் இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து தருவதால் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. நடிப்பு நடனம் அனைத்திலும் வியக்க வைக்கும் அளவிற்கு திறமைசாலியான சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார்.

ரவுடிபேபி

ரவுடிபேபி

தெலுங்கில் அறிமுகமான ஃபிடா இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற இப்பொழுது விராட பருவம் என்ற படத்தில் ராவான ரோலில் நடித்து வருகிறார் மேலும் நானியின் ஷ்யாம் சிங்கா ரெட்டி என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சூப்பர் ஆட்டம்

சூப்பர் ஆட்டம்

தமிழ் பெண்ணாக இருந்தாலும் பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் அறிமுகமானார் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2ல் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கால் தடத்தைப் பதித்து ரவுடிபேபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டு ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமானார். இதில் தனுஷுக்கு இணையாக நடமாடி ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

தாத்தாவின் 85வது பிறந்தநாள்

தாத்தாவின் 85வது பிறந்தநாள்

இப்பொழுது தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாய்பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய தாத்தாவின் 85வது பிறந்த நாளை மிகவும் புத்துணர்ச்சியுடன் கொண்டாடி உள்ளார். அதில் நீல நிற பட்டுப்புடவையில் பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் சாய் பல்லவியை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் சாய்பல்லவி

குடும்பத்துடன் சாய்பல்லவி

மிகவும் பிஸியாக இருக்க கூடிய நேரத்திலும் குடும்பத்திற்காகவும்,தாத்தா பாடிக்காக நேரம் செலவிடும் தங்களது கனவுக்கன்னியை பாராட்டித்தள்ளுகின்றனர் இவரது ரசிகர்கள் . தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரை பாசத்துடன் கட்டி அணைத்துக் கொண்டு எடுத்த இந்த க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு எங்கள் குடும்பத்தின் ஆணி வேருக்கு இன்று 85வது பிறந்தநாள் என பூரித்து பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ஒரு கோடி லைக்குகளுக்கு மேல் வந்துள்ளது .பலரும் பல விதமான இமோஜி ஹார்ட்டுகளும், கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். தாத்தாவாக இருந்ததாலும் செலிபிரிட்டி வீட்டு தாத்தாவாக மிகவும் மகிழ்ச்சியுடன் சாய்பல்லவி தாத்தா புன்னைகை தேசத்தில் தனது அன்பு பேத்தியுடன் தனது இனிமையான நாட்களை பல விதமான பழைய கதைகள் சொல்லி அன்புடன் வாழ்ந்து வருகிறார் . தாத்தா ஒரு பக்கம் கதை சொல்ல டெய்லி நடக்கும் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றி தாத்தாவிடம் பல கதை சொல்லி சாய்பல்லவி ஒரு குட்டி இளவரிசியாக தாத்தா மனதில் நீங்கா இடம் பிடிப்பாராம். தமிழ் சினிமாவில் நிறைய தாத்தா பேத்தி பற்றிய கதைகள் மிக பெரிய இயக்குனர்கள் கைவண்ணத்தில் நல்ல திரைக்கதையுடன் வந்து உள்ளது . இன்னமும் சொல்லப்படாத பல தாத்தா கதைகள் சுவாரஸ்ய அனுபவங்கள் காட்சிகளாக வரவில்லை . அப்படி பட்ட நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து விரைவில் சாய்பல்லவி ஒரு அவுட் ஆப் ரொட்டின் படம் ஒன்று விரைவில் செய்ய வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர் .Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here