தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை… சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு… என்னனு தெரியுமா?

0
17
தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை… சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு… என்னனு தெரியுமா?

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் மொத்தம் 650 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதுதான் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையாகும்.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 4,500க்கும் மேற்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கடந்த ஜூன் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 250 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தால் வெறும் 7 கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

இஸட்எஸ் மற்றும் கோனா ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுடன் ஒப்பிடும்போது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு அதன் குறைவான விலைதான் முக்கியமான காரணம். ஆனால் எம்ஜி இஸட்எஸ் மற்றும் கோனா ஆகியவற்றுக்கு, டாடா நெக்ஸான் நேரடியான போட்டியாளர் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

அதற்கும் சற்றே கீழான செக்மெண்ட்டில்தான் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், 13.99 லட்ச ரூபாய் முதல் 16.56 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, 20.99 லட்ச ரூபாய் முதல் 24.18 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

மறுபக்கம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 23.77 லட்ச ரூபாய் முதல் 23.96 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் தற்போது கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

ஆனால் வரும் காலங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர், டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார்கள் ஓரளவிற்கு குறைவான விலையில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... சமாளிக்க முடியாமல் மக்கள் எடுக்கும் புது முடிவு... என்னனு தெரியுமா?

அதே சமயம் இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் வேகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர். எரிபொருள் விலை குறைவதற்கான அறிகுறிகள் தெரியாததால், இன்னும் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here