தீபாவளி வெளியீட்டில் ‘அண்ணாத்த’ உறுதி: விரைவில் ஃபர்ஸ்ட் லுக் | Annatha slated for Diwali release

0
11
தீபாவளி வெளியீட்டில் ‘அண்ணாத்த’ உறுதி: விரைவில் ஃபர்ஸ்ட் லுக் | Annatha slated for Diwali release


தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாகும் எனவும், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.

தீபாவளி வெளியீடு என்று முன்பே அறிவித்திருந்தாலும், கரோனா அச்சுறுத்தல் தாமதத்தால் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அதி்காரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here