Thursday, December 2, 2021
Homeதமிழ் Newsஆட்டோமொபைல்தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் பெரும்பாலான மிடில் க்ளாஸ் மக்கள் வாங்கக்கூடிய அளவிலான மலிவான ஹேட்ச்பேக் காராக செலிரியோவை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் பிரபலமானதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

அதன்பின் தற்போது வரையில் சில அப்டேட்கள் செலிரியோ மாடலின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இந்த வருடத்திற்கு உள்ளாக முற்றிலும் புதிய மாருதி செலிரியோ கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இதன் சோதனை மாதிரி ஒன்று சாலையில் சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

காடிவாடி செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களை இங்கே பார்த்து கொண்டிருக்கிறீர்கள். இரண்டாம் தலைமுறை செலிரியோ சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படுவது இது முதல்முறையல்ல. பல மாதங்களாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த ஸ்பை படங்களில் கருப்பு நிற மறைப்பால் மறைக்கப்பட்டுள்ள இந்த கார் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளிக்கிறது. இம்முறை செலிரியோ ஹேட்ச்பேக்கின் தோற்றத்திலும், தொழிற்நுட்பங்களிலும் ஏகப்பட்ட அப்டேட்களை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இதன்படி காரின் வெளிப்புற தோற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். புதிய தலைமுறை செலிரியோவின் முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் க்ரில், கூடுதல் குமிழ் டிசைனிலான ஹெட்லேம்ப்கள் மற்றும் மறுவேலை செய்யப்பட்ட முன் & பின்பக்க பம்பர்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இவற்றுடன் அகலமான மைய காற்று ஏற்பான், திருத்தப்பட்ட வடிவில் பின் கதவு, புதிய டிசைனில் ஃபாக் விளக்கிற்கான குழி போன்றவையும் புதிய செலிரியோவில் வழங்கப்பட்டிருப்பது போன்று தான் இந்த படங்களை பார்க்கும்போது தெரிகிறது. எடை குறைவான ஹெர்ட்டெக்ட் கே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செலிரியோ தற்போதைய மாடலை காட்டிலும் அளவில் பெரியதாக உள்ளது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இதன் காரணமாக புதிய காரின் உட்புறத்தில் நன்கு விசாலமான இடவசதியை எதிர்பார்க்கலாம். அத்துடன் இதன் கேபின் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட நவீன ஸ்மார்ட்ப்ளே தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கண்ட்ரோல்களுடன் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், அப்டேட்டான மைய கன்சோல் & டேஸ்போர்டு உள்ளிட்டவற்றால் நிரப்பப்பட்டிருக்கலாம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

மேலும் இதன் கேபினில் திருத்தப்பட்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படலாம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தொடரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜினும் தேர்வாக வழங்கப்படலாம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

ஆனால் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுவதற்கே வாய்ப்புள்ளது. இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் நிலையாகவும், ஏஎம்டி கூடுதல் தேர்வாகவும் கொடுக்கப்படலாம்.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கினாலும் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் இந்த செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பை 60 சதவீதமாக குறைத்துள்ளது. வாகன தயாரிப்பிற்கு தேவையான குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் மாருதி நிறுவனம் இவ்வாறான முடிவை எடுத்தது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

கொரோனா 2வது அலைக்கு பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி வேகமெடுத்த நிலையில், கடந்த ஜூலையில் மொத்தம் 1,70,719 கார்களை மாருதி சுஸுகி தயாரித்து இருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட்டில் தயாரிக்கப்பட்ட மாருதி கார்களின் எண்ணிக்கை 1,33,520 ஆக குறைந்தது.

தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 மாருதி செலிரியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு!

இந்த தயாரிப்பு குறைப்பு, வருகிற தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் மாருதி கார்களின் விற்பனையில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் காரினை மாருதி சுஸுகியால் டெலிவிரி செய்ய முடியாமல் போகலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds