HomeSportsவிளையாட்டு செய்திகள்“தோனியை பார்த்தே விளையாட்டுக்காக வேலையை விட்டேன்” - பாராலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்

“தோனியை பார்த்தே விளையாட்டுக்காக வேலையை விட்டேன்” – பாராலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்


“தோனியை பார்த்தே விளையாட்டுக்காக வேலையை விட்டேன்” – பாராலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக விளையாட்டுக்காக வேலையை உதறி உள்ளார் இளைஞர் ஒருவர். இன்று இந்தியாவுக்காக டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 

image

யார் இவர்?

2012 வரை அனைவரையும் போல இயல்பான வாழ்வை வாழ்ந்து வந்தவர் டெல்லியை சேர்ந்த ரஞ்சித் சிங். ஒருநாள் பைக்கில் பயணித்த போது அவரது வாழ்க்கையை தடம் புரட்டிப்போட்டது. மருத்துவமனையில் உயிருக்காக போராடி உயிர் பிழைத்தார். இருப்பினும் அந்த விபத்து அனைத்தையும் மாற்றியது. அதிலிருந்து மீண்டு வர இரண்டு ஆண்டுகள் பிடித்தது. வலது காலில் ஏற்பட்ட காயம் அவரால் பழையபடி நடக்க முடியவில்லை. 

அதனால் அவர் துவண்டு விடவில்லை. 2016-இல் வெளியான தோனியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான M.S. DHONI : THE UNTOLD STORY திரைப்படம் அவருக்குள் ஒரு உந்து சக்தியை உருவாக்கி உள்ளது. அந்த உந்துதலை ஏற்படுத்தியது தோனி. 

image

அதன் பலனாக விளையாட்டின் மீது ஆர்வம். ஈட்டியெறிதலில் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டார். அதே நேரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிலும் அவர் பணி செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலையா? விளையாட்டா? என்ற சூழலை அவர் எதிர்கொண்டுள்ளார். அப்போது சிறிதும் தயங்காமல் விளையாட்டு தான் எல்லாம் என வேலையை உதறி உள்ளார். 

அதில் அவரது அப்பா மற்றும் அம்மாவுக்கு துளி கூட சம்மதம் இல்லை. தேசிய அளவிலான போட்டிகளில் அசத்தி இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து டெல்லியில் பாராலிம்பிக் 2020-க்கான டிரையலில் 44.50 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த அவர் இந்தியாவுக்காக அதில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

தனது ஆர்வத்தில் சாதித்த அவர் இன்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் முனைப்புடன் டோக்கியோவில் களம் கண்டுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read