தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

0
12

சரோஜா படம் பார்த்திருக்கீங்களா? படம் பார்க்கலைனாலும் கண்டிப்பா தோஸ்த் பட தோஸ்த் வீடியோ பாட்டை நீங்க பார்க்காம இருக்க முடியாது. ஆமாங்க, நண்பர்களுக்கான ஸ்பெஷல் பாடல் அது. இந்த பாட்டில் நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல ஓர் பழைய ஃபோக்ஸ்வேகன் வாகனத்தை பயன்படுத்தியிருப்பாங்க.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

இந்த வாகனத்தைதான் மீண்டும் விற்பனைக்குக் களமிறக்க ஃபோக்ஸ்வகன் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை ஐடி.பஸ் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. தொடர்ந்து மூன்று விதமான வேரியண்டுகளில் அதனைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

உலகம் முழுவதிலும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை புதிதாக மின்சார வாகனங்களைக் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிக இட வசதிக் கொண்ட ஓர் வாகனமாக இடி.பஸ் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதனை ஆறு இருக்கை வசதிக் கொண்ட ஓர் வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன்.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

அதிக இடவசதி மட்டுமின்றி மிக அதிக சொகுசு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதியும் புதிய எலெக்ட்ரிக் ஐடி.பஸ் வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனடிப்படையில், ஒவ்வொரு இருக்கைக்கும் தனி தனியாக இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட இருக்கின்றது. இது பயணிகளின் பயணத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும்.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

அமெரிக்க சந்தையில் இந்த வாகனத்தை நான்கு இருக்கைக் கொண்ட வேரியண்டாக விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின் பகுதியில் நீண்ட தூர பயணத்திற்கு உதவக் கூடிய சில அம்சங்களுடன் அது அமெரிக்காவில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

தொடர்ந்து, பார்சல் மற்றும் கூட்ஸ் டெலிவரிக்காக பயன்படும் வாகனமாக இதனை உருவாக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. வெவ்வேறு விதமான சந்தையைக் களம் காணும் வகையில் ஐடி.பஸ் உருவாக இருக்கின்றது. தொடர்ந்து, அனைத்து மூன்று விதமான தேர்வுகளிலும் நான்காம் நிலை தாானியங்கி டிரைவிங் சிஸ்டம் வழங்கப்பட இருக்கின்றது.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

ஆரம்ப நிலை தானியங்கி வசதியுடன் எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி கார் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபோக்ஸ்வேகன் தனது அனைத்து உற்பத்தி வாகனங்களையும் 2030ம் ஆண்டிற்குள் மின்சார வெர்ஷனில் அப்கிரேட் செய்ய இருக்கின்றது.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

இந்த நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையிலேயே ஐடி.பஸ் வாகனத்தை நிறுவனம் மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனம் 48 kWh மற்றும் 111 kWh பேட்டரி பேக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இந்த வாகனம் அமெரிக்க சந்தையிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. 2023ம் ஆண்டில் இது விற்பனைக்கு வர இருக்கின்றது.

தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்துருக்கீங்களா? பாடலில் வரும் பழைய காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

இதற்கு முன்னதாக அடுத்த ஆண்டே ஐரோப்பிய சந்தையில் ஐடி.பஸ் விற்பனைக்கு கிடைக்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இதன் பின்னரே உலக சந்தையில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.பஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இதன் இந்திய வருகை சந்தேகமே. ஆம், இந்திய வருகைக்கான எந்த அறிகுறியும் இதுவரை வெளியாகவில்லை என்பதே உண்மை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here