நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்… மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு… என்னனு தெரியுமா?

0
15
நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்… மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு… என்னனு தெரியுமா?

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையும் உயரவுள்ளது. வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வரும் அதே நேரத்தில், எரிபொருள் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

இதனால் ஏற்படக்கூடிய சுமையில் சிறிய அளவை வாடிக்கையாளர்களின் தலையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இறக்கவுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஆக்டிவா, டியோ, க்ரேஸியா, ஹார்னெட் 2.0, எக்ஸ்பிளேடு, லிவோ, யூனிகார்ன், ஷைன், எஸ்பி 125 மற்றும் சிடி 110 உள்ளிட்ட பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதே நேரத்தில் தனது பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக விலை உயர்ந்த பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்கிறது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

இதன்படி கோல்டுவிங், சிபி500 எக்ஸ், சிபி650 ஆர், சிபிஆர்650 ஆர், சிபி1000 ஆர், சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர் பிளேடு, ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350 ஆர்எஸ் ஆகிய பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் இந்த பைக் வேகமாக பிரபலமாகி வருகிறது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 உள்ளிட்ட பைக்குகள் உடன், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது. இதற்கிடையே ஹோண்டா தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி பெனெல்லி நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

இதுதவிர உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளது. ஹீரோ டூவீலர்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரவுள்ளது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை உயரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வாகன நிறுவனங்களின் இந்த விலை உயர்வு நடவடிக்கை வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?

ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் இழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் வாகனங்களின் விலையும் உயரவுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here