நடிகர் சங்க பெயர் மாற்றம்…பாரதிராஜாவுக்கு திடீரென குவியும் ஆதரவு | Bharathiraja initiated for a name change of South Indian Artistes’ Association; Fans trend a hashtag in support

0
7
நடிகர் சங்க பெயர் மாற்றம்…பாரதிராஜாவுக்கு திடீரென குவியும் ஆதரவு | Bharathiraja initiated for a name change of South Indian Artistes’ Association; Fans trend a hashtag in supportநடிகர் சங்க பெயர் மாற்றம்…பாரதிராஜாவுக்கு திடீரென குவியும் ஆதரவு | Bharathiraja initiated for a name change of South Indian Artistes’ Association; Fans trend a hashtag in support

பாரதிராஜாவிற்கு குவியும் ஆதரவு

இந்நிலையில் பாரதிராஜாவின் இந்த கோரிக்கையை வைத்து ட்விட்டரில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. ரசிகர்கள் பலர் பாரதிராஜாவின் கோரிக்கை சரியானது தான் என ஆதரவு குரல் கொடுத்தனர்.

தமிழ் நடிகர் சங்கம் வேணும்

இந்நிலையில் WeNeed_TamilActorsAssociation என்ற ஹேஷ்டாக் இன்று காலை முதல் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. அதே போன்று இனி வரும் காலங்களில் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நடிகர்களே தமிழ் நடிகர் சங்கத்தை நிர்வாகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழுக்கு இருந்தா என்ன

மற்ற மொழி நடிகர்களுக்கென தனி நடிகர் சங்கம் இருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் இருக்கக் கூடாது. தமிழ் நடிகர்கள் சங்கம் மட்டுள் ஏன் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயரிட வேண்டும் என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரகாஷுக்கு எதிர்ப்பு

பாரதிராஜா கோரிக்கை வைத்ததால் மட்டுமல்ல, தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here