நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது மறைந்த நடிகர் சுஷாந்த் படத்திற்கும் விருது! | 67th National award: Kangana Ranauth is the best actress

0
32
நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது மறைந்த நடிகர் சுஷாந்த் படத்திற்கும் விருது! | 67th National award: Kangana Ranauth is the best actress


கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

சிறந்த நடிகைக்கான விருது பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களுக்காக கங்கனா ரனாவத்துக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சுஷாந்த் படம் தேர்வு

சுஷாந்த் படம் தேர்வு

சிறந்த இந்தி படமாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சிகிஹோரே படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை படமான இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

சிகிஹோரே படம்

சிகிஹோரே படம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான சிகிஹோரே திரைப்படம் சிறந்த இந்தி படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் ஜெர்சி

நானி நடிப்பில் ஜெர்சி

நானி நடிப்பில் வெளியான ஜெர்சி திரைப்படம் சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படமாக மரக்கார் – லைன் ஆஃப் தி அரேபியன் சீ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

துணை நடிகர்

துணை நடிகர்

சிறந்த துணை நடிகைக்கான விருது தி டாஷ்கென்ட் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்திற்காக பல்லவி ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடனம்

சிறந்த நடனம்

சிறந்த இயக்கத்திற்கான விருது பட்டர் ஹூரியன் படத்திற்காக சஞ்சய் பூரன் சிங் சவுகானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது மலையாள சினிமாவை சேர்ந்த மதுக்குட்டி சேவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடனத்திற்கான விருது தெலுங்கு படமான மகரிஷி படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடகி பாடகர்

சிறந்த பாடகி பாடகர்

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டிங்குக்கான விருது தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடகிக்கான விருது சவானி ரவீந்திராவுக்கம் சிறந்த பாடகருக்கான விருது பி பிராக் என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here