‘நெற்றிக்கண்’ இறுதி வடிவத்தைப் பாராட்டிய நயன்தாரா | Nayanthara impressed with the final version of Netrikann

0
45
‘நெற்றிக்கண்’ இறுதி வடிவத்தைப் பாராட்டிய நயன்தாரா | Nayanthara impressed with the final version of Netrikann


‘நெற்றிக்கண்’ இறுதி வடிவத்தைப் பார்த்த நயன்தாரா இயக்குநரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். கடந்த ஆண்டு இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது,

கடந்த ஆண்டு ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீதிக் காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த நயன்தாராவுக்குப் படம் மிகவும் பிடித்துவிட்டதாகவும், படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவை அழைத்து நயன்தாரா பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கரோனா இரண்டாவது அலை நாடு முழுவும் தீவிரமடைந்துள்ள நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ‘நெற்றிக்கண்’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here