பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்… இத மட்டும் மறந்திடாதீங்க!

0
18
பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்… இத மட்டும் மறந்திடாதீங்க!

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்திய (செகண்ட் ஹேண்ட்) கார்களுக்கும் நல்ல மவுசு நிலவி வருகின்றது. மலிவு விலையில், விரும்பும் காரை பெற முடியும் என்ற ஒற்றை காரணமே பயன்படுத்திய கார்களின் பக்கம் மக்கள் ‘ஈ’ போல் மொய்க்க காரணமாக இருக்கின்றது.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

இதன் காரணத்தினால்தான் புதிய கார்களை விற்பனைச் செய்யும் ஷோரூம்களுக்கு இணையாக பயன்படுத்திய கார்களுக்கான ஷோரூம்கள் இங்கு அதிகமாக இருக்கின்றன. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட இதற்கான ஷோரூம்களை அமைத்து, பயன்படுத்திய வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

இவ்வாறு கொடிகட்டிப் பறக்கும் செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் பயன்படுத்திய காரை வாங்குவது என்பது ரொம்ப சுலபமான ஒன்று. அவற்றை வாங்கிய பின்னர் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

சர்வீஸ்

செகண்ட் ஹேண்ட் சந்தையில் காரை வாங்கிவிட்டீர்கள் என்றால், அந்த கார் எப்போது கடைசியாக சர்வீஸ் செய்யப்பட்டது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். அது சர்வீஸ் செய்யப்படவில்லை என்பதால் அறிந்தால் உடனடியாக சர்வீஸ் விடுவது அவசியம்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

ஆயில் மாற்றுதல், பிரேக்கிங் சிஸ்டத்தை பழுது பார்த்தல் மற்றும் தேய்மானமடைந்த பாகங்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக வண்டின் ஆயுலையும், தேவையற்ற பழுது ஆகிய சிக்கல்களை நீக்க முடியும்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

சுத்தம்

அதான் சர்வீஸ் விட சொல்லீட்டீங்களே அங்கேயே இத செஞ்சிட மாட்டாங்களா என கேக்குறீங்களா?, நம்மில் பலர், இப்போதான் காரை வாங்கினேன். அதுக்கே அங்க, இங்கனு கடன வாங்கியிருக்கேன். இதுல இப்போ மெக்கானிக் கிட்ட எடுத்துட்டு போனா, அவங்க ஒரு சில ஆயிரத்தை தீட்டிடுவாங்க, என நினைக்கலாம்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

அப்படி நினைப்பவர்கள் சர்வீஸ் சிறிது நாட்கள் கழித்துவிடலாம். ஆகையால், அந்த நாட்கள் வரை காத்திருக்காமல் குறைந்தபட்சம் காரை ஒரு முழு சுத்தப்படுத்தலுக்கு உட்படுத்துவது மிக சிறந்தது. அதேசமயம், அக்காரை சர்வீஸ் விட முயற்சிப்பது கூடுதல் சிறந்தது. இதன் வாயிலாக காருக்குள் இருக்கும் பழுதை மட்டுமின்றி கிருமிகளையும் வெளியேற்ற முடியும்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

உரிமையாளர் பரிமாற்றம்

பயன்படுத்திய வாகனத்தை வாங்கிய பின்னர் உடனடியாக அதை உங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். அங்கீகரிக்கப்பட்ட சில நிறுவனங்கள் பெயர் மாற்றம் பணிகளை அவர்களே செய்து கொடுக்கின்றனர். தெரிந்தவர், பக்கத்து கடை, ஆன்லைன் ஆப் ஆகியவற்றில் இந்த வசதி கிடைப்பதில்லை.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

ஆகையால், வாகனத்தின் உண்மையான உரிமையாளரிடத்தில் தேவையான ஆவணங்களைப் பெற்று அக்காரை உங்களின் பெயருக்கு மாற்றும் நடவடிக்கையில் காரை வாங்கிய உடனே செய்வது அவசியம். எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவே இதனை கட்டாயம் என கூறுகின்றோம். முன்பைக் காட்டிலும் பல மடங்கு வாகன பெயர் மாற்றம் செய்வது மிக சுலபமாக மாறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

இன்சூரன்ஸ்

செகண்ட் ஹேண்டில் வாங்கப்பட்ட காருக்கு இன்சூரன்ஸ் இருக்கின்றதா என்பதை அவசியமாக பார்த்து வாங்குங்க. அது காலாவதியாகி இருந்தால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தை அணுகி ஓர் புதிய காப்பீட்டை வாங்கிக்கோங்க. இது காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து மட்டுமல்ல தேவையற்ற கசப்பான நிகழ்வுகளின் நிதியளவில் உதவ வழி வகுக்கும்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

பயன்படுத்திய கார்களுக்கு பிரீமியம் சற்று குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், சில காப்பீட்டு நிறுவனங்கள் இணையத்தின் வாயிலாக புதிய பிரீமியத்தைப் பெறும் சில சலுகைகளை வழங்குகின்றது. ஆகையால், புதிய காருக்கு இன்சூரன்ஸ் எடுப்பதைக் காட்டிலும் இது மிக மலிவானதாக இருக்கும்.

பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா? வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்... இத மட்டும் மறந்திடாதீங்க!

அவ்வப்போது பராமரிப்பு செய்யுங்கள்

செகண்ட் ஹேண்ட்ல கார வாங்கியிருந்தீங்கனா அடிக்கடி ஒரு மெயின்டெனன்ஸ் பண்ணிடுங்க. அது புதிய கார் இல்லை என்பதைக் குறிப்பாக மனசுல வச்சுக்கோங்க. எனவே, நீண்ட தூர பயணம், குறிப்பிட்ட கிமீ பயணங்களுக்கு பின்னர் ஓர் சர்வீஸ் கொடுத்துவிடுவது மிக சிறந்தது. இதன் வாயிலாக காரை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். குறிப்பாக, நீங்க செகண்ட் ஹேண்டில் விற்கும் நல்ல மதிப்பில் விற்க அது உதவியாக இருக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here