பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவு – திரையுலகினர் இரங்கல் | Veteran Kannada actor Jayanthi no mor

0
60
பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவு – திரையுலகினர் இரங்கல் | Veteran Kannada actor Jayanthi no mor


பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76.

‘நீர்குமிழி’, ‘பாமாவிஜயம்’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஜெயந்தி. கமலா குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 60 மற்றும் 70களில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கன்னட சினிமா ரசிகர்களால் ‘அபிநய சாரதா’ என்று அழைக்கப்படும் ஜெயந்தி இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி இன்று (ஜூலை 26) காலை காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here