
சித்ராவால் பிரபலமான முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார் விஜே சித்ரா. இவரது க்யூட்டான நடிப்பால் அந்த கேரக்டர் மிகவும் பிரபலமானது. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்தவர்கள் அதிகம். ஆனால் திடீரென சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், அவர் நடித்த முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்காமல் இருந்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டல்லடிக்க துவங்கியது.

மாற்றப்பட்ட முல்லை கேரக்டர்
சித்ரா இருந்த வரை அவரை மையமாக வைத்து கதை நகர்ந்தது. அவருக்கு பிறகு தனத்தை மையமாக வைத்து சில வாரங்கள், கண்ணன் – ஐஸ்வர்யா காதலை வைத்து சில வாரங்கள் என ஓட்டினார்கள். பிறகு முல்லை கேரக்டரை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க துவங்கி விட்டதால் முல்லை – கதிர் ரொமான்ஸ் காட்சிகளை வைத்து சென்றது.

முல்லைக்கு குழந்தை பிறக்குமா
பிறகு முல்லை தனக்கு குழந்தை இல்லை என ஏங்குவதாகவும், அவரின் ட்ரீட்மென்டிற்காக மொத்த குடும்பமும் தியாகம் செய்வதாகவும், முல்லையை கதிர் எப்படியெல்லாம் பாசமாக கவனித்து கொள்கிறார் என்பதை வைத்துமே தற்போது கதை சென்று கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக காவியா அறிவுமணி முடிவு செய்துள்ளாராம். இதனால் முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய முல்லையின் என்ட்ரி நடக்க உள்ளதாம்.

புதிய முல்லை இவரா
முல்லை கேரக்டரில் அடுத்ததாக நடிக்க போவது வேறு யாருமில்லை, ராஜா ராணி 2 சீரியலில் லீட் ரோலில் நடித்த ஆலியா மானசா தானாம். ராஜா ராணி முதல் சீசனின் மூலம் அறிமுகமான ஆலியா, அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே தனக்கு ஜோடியாக லீட் ரோலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அயிலா என்ற பெண் குழந்தை உள்ளார். திருமணத்திற்கு பிறகு சீரியலுக்கு பிரேக் விட்ட ஆலியா, ராஜா ராணி 2 மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.

மீண்டும் நடிக்க வருகிறாரா
ஆனால் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். பிரசவம் காலம் நெருங்கியதால் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இனி ராஜா ராணி 2 சீரியலுக்கு திரும்பப் போவதில்லை என்றும் அறிவித்தார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆலியா நடிப்பாரா என கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டர் மூலம் மீண்டும் நடிக்க வர போகிறாராம்.