பாலிவுட்ல ரன்பீர் கபூரோட சேர்ந்து ரொமாண்டிக் படத்துல நடிக்கணும்… சமந்தா பளீர் | Here’s why Samantha Akkineni hasn’t signed any Bollywood films

0
33
பாலிவுட்ல ரன்பீர் கபூரோட சேர்ந்து ரொமாண்டிக் படத்துல நடிக்கணும்… சமந்தா பளீர் | Here’s why Samantha Akkineni hasn’t signed any Bollywood films


சிறப்பான படங்களில் சமந்தா

சிறப்பான படங்களில் சமந்தா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகமான மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர் சமந்தா அக்கினேனி. திருமணம் முடிந்தால் அவர்களுக்கு முக்கியமான கதாநாயகி அந்தஸ்து போய்விடும் என்ற கருத்தை இவர் பொய்யாக்கியுள்ளார். திருமணத்திற்கு பின்பே சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் கதாநாயகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

சிறப்பான அங்கீகாரம்

சிறப்பான அங்கீகாரம்

தற்போது தி பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவிற்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சீமா பிஸ்வாஸ், தர்ஷன் குமார், சரத் கேல்கர், சன்னி ஹிந்துஜா மற்றும் ஷ்ரேயா தன்வாந்தரி உள்ளிட்டவர்கள் இந்த சீரிசில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

நடிக்காததற்கு காரணம்

நடிக்காததற்கு காரணம்

இந்நிலையில் பாலிவுட் படங்களில் தான் இதுவரை நடிக்காததற்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா. பாலிவுட்டில் அதிகமான திறமையாளர்கள் உள்ளதால் தான் இங்கு நடிப்பதற்கு பயப்படுவதாக அவர் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை

ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை

ஆனால் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரன்பீல் கபூருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இன்டர்வியூவை பார்க்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் யாராவது அவருடைய இந்த ஆசையை நிறைவேற்றுவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here