துர்க்குவு: பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இப்போட்டியில் பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு நீரஜ் சோப்ரா முதல் முறையாக ஒரு போட்டிப் போட்டியில் பங்கேற்றது இதுவாகும். இதில் தனது சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக தன்னை தீவிரமாகத் தயார்படுத்தி வரும் நீரஜ், இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தனது திறனை நிரூபித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 90மீ தூரம் எறிவதை இலக்காக கொண்டு செயல்படவும் துவங்கியுள்ளார். அதற்கேற்ப, இன்று நடந்த போட்டியில் முதல் சுற்றில் 86.92 மீட்டர் தூரம் எறிந்து போட்டியை துவங்கியவர், இரண்டாவது முயற்சியில் 89.30 மீட்டர் எறிந்தார். எனினும், அடுத்த மூன்று முயற்சிகளில் ஹெலாண்டர் முந்திக்கொள்ள தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளிப்பதக்க வென்றார் நீரஜ்.
Source link
www.hindutamil.in
செய்திப்பிரிவு