பிரண்டை குழம்பு | Brandy broth

0
21
பிரண்டை குழம்பு | Brandy broth


என்னென்ன தேவை?

கொழுந்து பிரண்டை 1 இஞ்ச் நீளத்தில் நறுக்கவும் – 1 கப்,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 10 பல்,
காய்ந்தமிளகாய் – 1,
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
புளிக்கரைசல் – 2 கப்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
வெல்லம் – சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய பிரண்டையை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். பிரண்டை நிறம் மாறி கரண்டியால் அழுத்தினால் சத்தம் வராதபடி ஈரம் போக வதக்கவும். சட்டியில் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி, குழம்பு மிளகாய் பொடி, தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கிளறி புளி கரைசல் ஊற்றி, வதக்கிய பிரண்டை, உப்பு போட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கும்போது வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here