பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு… மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

0
17
பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு… மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் அண்மையில் ஒன்றிய அரசிடம் ஓர் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான வரியை குறைக்குமாறு அரசிடம் கோரியிருந்தது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இந்த கோரிக்கைக்கே இந்திய அரசு நிராகரிப்பை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இளைய அமைச்சர்களில் ஒருவரான கிரிஷன் பால் குர்ஜார் பாராளுமன்றத்தில், கனரக தொழில்துறை அமைச்சகத்தில் இதுமாதிரியான திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

டெஸ்லா நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் கடந்த வருடமே தொடங்கிவிட்டது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இதனடிப்படையில் இந்தியாவில் ஓர் தலைமை அலுவலகத்தை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தனது உலக புகழ் பெற்ற மாடல் 3 மின்சார கார் மாடலை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர செடான் காராகும்.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இந்த கார் நடப்பு 2021ம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை நிறுவனம் சிபியூ (முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்து) விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாதிரியான வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி வசூலிக்கப்படுகின்றது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இதனைக் குறைக்க வேண்டும் என்றே அமெரிக்க மின் வாகன தயாரிப்பாளர் அண்மையில் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 40 சதவீதம் வரை வரி குறைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதன் வாயிலாக தங்களால் போட்டியிட்டின்றி மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்க முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இதற்காகவே இந்திய அரசிடம் தங்களின் கோரிக்கையை முன் வைத்திருந்தது. டெஸ்லாவின் இந்த கோரிக்கைக்கு பல நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன. மேலும், ஒரு சில நிறுவனங்கள் தங்களுக்கும் இதுமாதிரியான சலுகையை வழங்குமாறு டெஸ்லாவை அடுத்து கோரிக்கையை முன் வைக்க தொடங்கின.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

ஆகையால், டெஸ்லா பற்ற வைத்த நாடு முழுவதும் எரிய தொடங்கியிருக்கின்றது என்றே கூறலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், இந்திய அரசு ஒரே அடியாக வரியை குறைப்பதற்கான திட்டம் அரசிடம் இல்லை என தெரிவித்திருக்கின்றது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இந்த தகவல் வாகன உற்பத்தியாளர்களை மட்டுமின்றி மின் வாகன பிரியர்கள் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க், வாகனங்களை முதலில் இறக்குமதி செய்துவிட்டு, அதன் பின்னர் தனது வாகன உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்க இருப்பதாக இந்தியர்கள் சிலரின் கேள்விக்கு அண்மையில் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

உலகளவில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த கார் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களே முக்கிய காரணம் ஆகும்.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 568 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது வெறும் 3.1 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 96 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், இக்காரை சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் வைத்து வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 175 மைல் தூரம் வரை பயணிக்கக் கூடிய சார்ஜை ஏற்றிக் கொள்ளும்.

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு... மிக பெரிய கனவுல இருந்தாங்க!!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மின்சார காராகவே டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இதனையே தனது முதல் எலெக்ட்ரிக் காராக இந்தியாவில் டெஸ்லா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here