பிரபல பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி | Naseeruddin Shah admitted to hospital, suffering from pneumonia

0
13
பிரபல பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி | Naseeruddin Shah admitted to hospital, suffering from pneumonia


பிரபல பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை கார் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை நசிருதீன் ஷாவின் மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று (ஜூன் 29) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது உடல்நலன் தேறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் நடிகர் நசிருதீன் ஷா வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ வெட்னெஸ்டே, தி டர்டி பிக்சர் ஆகியன இவரது சிறந்த நடிப்புக்கான சில உதாரணப் படங்கள். நசிருதீன் ஷா, பத்ம பூஷண் விருது வென்ற நாடு முழுவதும் அறியப்பட்ட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here