பிஸ்கெட் பர்த்டே கேக் | Biscuit Birthday Cake

0
17
பிஸ்கெட் பர்த்டே கேக் | Biscuit Birthday Cake


என்னென்ன தேவை?

மேரி பிஸ்கெட் – 40,
சாக்லெட் பிஸ்கெட் – 40,
வெண்ணெய் – 1 கப்,
ஃப்ரெஷ் கிரீம் – 1/4 கப்,
சாக்லெட் பார் – 100 கிராம்,
பவுடர் சுகர் – 2 டீஸ்பூன்.

எப்படிச்  செய்வது?

மேரி பிஸ் கெட்டை மிக்சியில் நன்றாக பொடித்து, அத்துடன் 1/4 கப் உருகிய வெண்ணெய், 2 டீஸ்பூன் கிரீம் சேர்த்து நன்றாக கலந்து கேக் ட்ரேயில் சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் அல்லது கலவை செட் ஆகும் வரை வைக்கவும். சாக்லெட் பிஸ்கெட்டை நன்றாக பொடித்து, அத்துடன் 1/4 கப் உருகிய வெண்ணெய், 2 டீஸ்பூன் கிரீம் சேர்த்து நன்கு கலந்து ஏற்கனவே செட் செய்த பிஸ்கெட் கலவையின் மேல் சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் மீண்டும் 30 நிமிடம் வைக்கவும். சாக்லெட் பாரை டபுள் பாயிலிங் முறையில் உருக்கி, அதனுடன் மீதியிருக்கும் வெண்ணெய், கிரீம், பவுடர் சுகர் சேர்த்து நன்கு பளபளப்பாக வரும் வரை கலந்து கேக்கின் மேல் பரவலாக ஊற்றி மீண்டும் 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here