புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

0
12
புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா புதிய பொலிரோ நியோ காரை நடப்பு ஜூலை மாத இறுதியில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தான் தற்போது இந்த டீசர் வீடியோகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டீசர் வீடியோவின் மூலம் காரை பற்றிய சில விபரங்களை நம்முடன் மஹிந்திரா நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஜூலை மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கிய அறிமுகங்களுள் ஒன்றாக விளங்கும் 2021 மஹிந்திரா பொலிரோ நியோ, தற்போதைய டியூவி300 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படுவது உங்களிலில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

இந்த டீசர் வீடியோவில் 6-ஸ்லாட் க்ரோம் க்ரில், கிடைமட்ட டிஆர்எல்களுடன் ரீடிசைனிலான ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பம்பர் உள்ளிட்டவற்றுடன் புதிய முன்பக்கத்தை 2021 பொலிரோ நியோ பெற்றுவரவுள்ளது.

பக்கவாட்டில் புதிய தொகுப்பாக சில்வர் நிறத்தில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களை இந்த கார் கொண்டுள்ளதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. மற்றப்படி மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கு தேவையான தண்டவாள கம்பிகளை பார்க்க முடியவில்லை.

புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

புதிய மஹிந்திரா பொலிரோவின் உட்புறம் திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கருப்பு நிறத்தில் ஸ்டேரிங் சக்கரம், இரண்டாவது வரிசை இருக்கைக்கும் கை & தலைக்கான தலையனை முதலியவற்றுடன் பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மஹிந்திரா பொலிரோ நியோவில் பிஎஸ்6-க்கு இணக்கமான 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் பிஎஸ்4 வெர்சனில் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

புதிய பொலிரோ நியோ காரின் அறிமுகத்தில் தீவிரமாக இருக்கும் மஹிந்திரா!! அறிமுகம் இந்த ஜூலையிலா?

டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. விற்பனையில் புதிய மஹிந்திரா பொலிரோவிற்கு கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ரெனால்ட் கிகர், ஹூண்டாய் வென்யூ மற்றும் டாடா நெக்ஸான் போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்கும்.

புதிய பொலிரோ நியோ பிஎஸ்6 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலைகள் எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. தற்போதைய மஹிந்திரா டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக எதிர்பார்க்கப்படுகின்ற இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தில் ரூ.12 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here