பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல… பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்… இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

0
9
பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல… பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்… இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

திருத்தியமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகன கொள்கையை மஹாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் மானியங்களை வழங்குவதன் மூலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு மஹாராஷ்டிரா அரசு சலுகைகளை வழங்கவுள்ளது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

மேலும் வரும் 2025ம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்படும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 10 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தேவை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

இதை பூர்த்தி செய்யும் விதமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிகாபேக்டரியையாவது அமைக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் 18,000 பேருந்துகளை வைத்துள்ளது. இதில் 15 சதவீத பேருந்துகளை, வரும் 2025ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் முறைக்கு மாற்ற வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

மேலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் மஹாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் பேட்டரியின் ஒவ்வொரு kwh-க்கும் 5 ஆயிரம் ரூபாயை ஊக்க தொகையாக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர் என்றால் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

அதுவே எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் என்றால் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும் வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு ஊக்க தொகையை வழங்குவதற்கு மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு வழங்கப்படும்.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

மஹாராஷ்டிரா மாநில அரசின் இந்த முயற்சியால், எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை தற்போது ஊக்குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

இதில், டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்கனவே மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர கோவா மாநில அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு தற்போது முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

ஒவ்வொரு ஆண்டும் 11,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என ஒட்டுமொத்தமாக அடுத்த 5 ஆண்டுகளில் 55,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகள் தவிர, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here