Monday, July 26, 2021
Homeதமிழ் Newsஆட்டோமொபைல்பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள...

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை


பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இவ்வாறு பொலிரோ நியோவிற்கும், பொலிரோவிற்கும் இடையே சில ஒற்றுமைகளும், அதேநேரம் இரண்டிற்கும் இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்களும் உள்ளன. அவற்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இயக்கத்திறனிலும், பெயரிலும் பொலிரோ கொண்டிருக்கும் இந்த புதிய மஹிந்திரா வாகனம் தோற்றத்தில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள டியூவி300-ஐ ஒத்து காணப்படுகிறது. இதனால் டயர் 2 மற்றும் டயர் 3 நகர வாடிக்கையாளர்களுக்கு பொலிரோ நியோ மிகவும் ஏற்ற வாகனமாகும்.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இன்னும் சொல்லப்போனால் அப்டேட் செய்யப்பட்ட முன்பக்கத்துடனான டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்டிற்கு வைக்கப்பட்ட மறு பெயர் தான் பொலிரோ நியோவாகும். இதன் வருகையால் விற்பனையில் இருந்த டியூவி300 மாடலின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தியுள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த வாகனத்தின் பெயரில் பொலிரோவின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு காரணம் அந்த மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு தான். தற்சமயம் மஹிந்திரா பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனம் என்று பார்த்தால் அதில் நிச்சயம் பொலிரோவும் ஒன்றாக உள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

பொலிரோ நியோ என்4, என்8, என்10 மற்றும் என்10(O) என்ற நான்கு வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்ட் பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6(O) என்ற மூன்று வேரியண்ட்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பொலிரோ நியோவிற்கான எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.48 லட்சம் மற்றும் ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இன்னும் இதன் என்10 வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. பொலிரோ மாடலின் விலைகள் ரூ.8.63 லட்சத்தில் இருந்து ரூ.9.61 லட்சம் வரையில் உள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையினை கொண்டுள்ளது போல் தெரியலாம். ஆனால் இன்னும் பொலிரோ நியோவின் என்10 வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

அவற்றை ரூ.11 லட்சம் அளவில் எதிர்பார்க்கிறோம். இதனால் விலையில் பொலிரோ நியோ, பொலிரோவை காட்டிலும் ஒரு படி மேல் உள்ளது. இதற்கு ஏற்ப இந்த புதிய மாடலின் தோற்றம் பொலிரோவை விட பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's