பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

0
19

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனமான உற்பத்தி நிறுவனம் எம்வி அகுஸ்தா. இந்நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் அதன் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஆகையால், உலக புகழ்பெற்ற ஓர் நிறுவனமாக இது விளங்குகின்றது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

இந்த நிலையில் எம்வி அகுஸ்தா, நிறுவனம் இ-மிதிவண்டி (எலெக்ட்ரிக் சைக்கிள்) தயாரிப்பில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய தொழில் நுழைவை முன்னிட்டு இரு விதமான இலகு எடைக் கொண்ட இ-சைக்கிளை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

அமோ ஆர்ஆர் மற்றும் ஆமோ ஆர்சி ஆகிய பெயர்களில் இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இரு இ-மிதிவண்டியிலும் 250 வாட் ஒலியெழுப்பா மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை 250Wh பானசோனிக் பேட்டரி வழங்கும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய சிறப்பு திறன் வாய்ந்த இ-சைக்கிள்களையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

இரு சைக்கிளிலும் ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கே, அப்படினை ரெண்டுத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன? கேட்குறீங்களா., இரு இ-சைக்கிள்களுக்கும் இடைய சிறப்பம்சங்களே வித்தியாசமானதாக இருக்கின்றன.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

அதேசமயம், இரண்டும் பிரீமியம் தரத்திலேயே இருக்கும் என எம்வி அகுஸ்தா தெரிவித்துள்ளது. அந்தவகையில் இரு இ-மிதிவண்டிகளிலும் பைரெல்லி டயர்கள், மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் டிரைவ் பெல்ட் ஆகிய பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

இந்த இ-சைக்கிளின் ஒட்டுமொத்த எடையுமே 15.5 கிலோகிராம் ஆகும். எடைக்குறைவான மாடலாக உருவாக்குவதற்காக பல்வேறு எடைக்குறைப்பு வேலைகளையும், சிறப்பு அணிகலன்களையும் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த இ-சைக்கிளை தனது உள்ளூர் (இத்தாலி) உற்பத்தி ஆலையிலேயே வைத்து எம்வி அகுஸ்தா தயாரித்திருக்கின்றது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

உலக நாடுகள் பல எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மாற்று திறன் வசதிக் கொண்ட வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனடிப்படையில் மின் வாகன ஊக்குவிப்பிற்கே மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.

பைக்கை தொடர்ந்து இ-மிதிவண்டி தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம்! எடை குறைவான இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது வாடிக்கையாளர்கை விலையுயர்ந்த பிரீமியம் தர பைக்குகளால் மட்டுமின்றி இ-சைக்கிள்கள் வாயிலாகவும் கவரும் முயற்சியில் எம்வி அகுஸ்தா களமிறங்கியிருக்கின்றது. இரு இ-மிதிவண்டிகளின் விலைகுறித்த விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இதன் இந்திய வருகை சந்தேகமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here