பொய்க்கால் குதிரை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. வரலட்சுமியுடன் கை கோர்க்கும் பிரபுதேவா.. குவியும் வரவேற்பு | Prabudeva to pair with Varalakshmi Sarathkumar for a new movie

0
28
பொய்க்கால் குதிரை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. வரலட்சுமியுடன் கை கோர்க்கும் பிரபுதேவா.. குவியும் வரவேற்பு | Prabudeva to pair with Varalakshmi Sarathkumar for a new movie


வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

இந்தப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘பிக்பாஸ்’ பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ்

டார்க் ரூம் பிக்சர்ஸ்

ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடன பயிற்சி

நடன பயிற்சி

நீண்ட நாட்களாக பிரபு தேவா ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்து கொண்டு இருக்கிறார் , இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியை தரும் என்று மிகவும் நம்புகிறார், ஒற்றைக்காலில் நடனமாடி அதிகநேரம் நடன பயிற்சி செய்து மிகவும் மெனக்கெட்டு இந்த படத்திற்காக அதிக நேரம் கடுமையாக உழைத்து நடித்து வருகிறார் பிரபுதேவா

கோவில் திருவிழாக்களில்

கோவில் திருவிழாக்களில்

பிரபுதேவாவின் எத்தனையோ பெர்சனல் பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறந்துவிட்டு மிகவும் உற்சாகத்துடன் படப்பிடிப்பிற்கு புது உத்வேகத்துடன் வித்தியாசமான நடன அசைவுகளுடன் இந்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . பொய்க்கால் குதிரை என்றால் நாம் அனைவரும் அறிந்த கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று கிராமிய கலைஞர்கள் வித்தியாசமான கலர் கலர் உடைகளுடன் ஆடிப் பாடி மக்களை மகிழ்விப்பர்.

மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்

ஆனால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவா ஒரு கால் இல்லாமல் நடனமாடி இசைக்கு ஏற்ப தனது ரப்பர் உடம்பை வில்லாக வளைத்து எப்படி எல்லாம் ஆடுகிறார் என்பதை வித்தியாசமான திரைக்கதையுடன் செய்து வருகின்றனர் இந்த படக்குழுவினர் .

உணர்வுபூர்வமான காட்சிகள்

உணர்வுபூர்வமான காட்சிகள்

18 பிளஸ் படங்களுக்கு மிகவும் பெயர்போன இயக்குனர் சந்தோஷ் இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான வசனங்கள் உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவற்றை மிகவும் அற்புதமாக செதுக்கி வருகிறார் என்று படக்குழுவினர் பலரும் சொல்லி வருகின்றனர் .தனது வழக்கமான மசாலா கலந்த காம உணர்வை தூண்டும் காட்சிகளோ வசனங்களோ இந்தப்படத்தில் அதிகம் இருக்காது என்பதை பலரும் சொல்லி வருகின்றனர். ஒரு பக்கம் பிரபுதேவா என்றால் இன்னொரு பக்கம் வரலட்சுமி சரத்குமார் தனது எதார்த்தமான தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

உடல் ஊனமுற்றோர்

உடல் ஊனமுற்றோர்

பொய்க்கால் குதிரை படத்தின் போஸ்டரை பார்க்கும்பொழுது பலவிதமான கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது அதிலும் குறிப்பாக உடல் ஊனமுற்றோர் தங்களுக்கு ஏற்படும் வலியை உணர்த்தும் விதமாக இந்தப்படம் கண்டிப்பாக பல காட்சிகளை கொண்டு வரும் என்று நிறைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

கண்களில் விரக்தியுடன்

கண்களில் விரக்தியுடன்

போஸ்டரில் மிகவும் அழுக்கான உடையில் ஒரு பழைய லுங்கி மற்றும் பனியன் அணிந்து கையில் ஸ்பேனர் உடன் ஒரு குழந்தையை சுமந்து கொண்டு பிரபுதேவா நிற்பது, கண்களில் விரக்தியுடன் பார்ப்பது மிகவும் புதுமையாகவும் பல கேள்விகளை எழுப்பும் விதமாகவும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த திறமையை

ஒட்டுமொத்த திறமையை

பிரபுதேவா பொதுவாக நடனமாடுவது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனர் என்று பல படங்களில் நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் பிரபுதேவாவின் ஒட்டுமொத்த திறமையையும் காட்டும் ஒரு படைப்பாக இந்த பொய்க்கால் குதிரை இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

ரொமான்டிக் சாங்ஸ்

ரொமான்டிக் சாங்ஸ்

டி இமான் இசை என்றால் பலருக்கும் பலவிதமான பாட்டு நினைவில் வரும் அதுவும் குறிப்பாக டி இமான் இசையில் வந்த ரொமான்டிக் சாங்ஸ் மற்றும் உணர்வுபூர்வமான பாசம் மிகுந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கிடைத்துள்ளது. பொய்க்கால் குதிரை படத்திலும் உணர்வுபூர்வமான பல காட்சிகளில் தனக்கே உரித்தான பிஜிஎம் கொடுத்து இந்த கதைக்கு மேலும் மெருகேற்றி உள்ளார்

திருப்புமுனை

திருப்புமுனை

படத்தில் பலவிதமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரைசாவின் பங்கு படத்தின் மிகவும் திருப்புமுனையாக மிக மிக முக்கியமான காட்சிகளில் அமைந்துள்ளது என்று சந்தோஷ் பெருமையாக சொல்லி வருகிறார்

வைரலாக பரவி

வைரலாக பரவி

பொய்க்கால் குதிரை படம் ஓடி டி பிளாட்பார்ம் மூலம் வெளியே வருமா? அல்லது திரையரங்குகளில் வெளியே வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . இருந்தாலும் பிரபுதேவா ஒற்றை கால் இல்லாமல் நிற்பது போஸ்டர் ஏற்படுத்திய தாக்கம் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. கண்டிப்பாக இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரபுதேவாவை கண்டிப்பாக ரசிகர்கள் காண்பார்கள் என்பது படத்தின் பிரமோஷன் மூலம் தெளிவாக புரிகிறது .இன்னும் சில மாதங்களில் படத்தின் இன்னும் பல அப்டேட்கள் வெளிவர உள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here