Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

பொரிச்ச பரோட்டா | Poriccha Baroda


தேவையான பொருட்கள்:

தரமான மைதா – கால் கிலோ.
உப்பு – தேவையான அளவு.
கடலை எண்ணெய் – 200 கிராம்.
தண்ணீர் – தேவையான அளவு.
சர்க்கரை – ஒரு சிட்டிகை.

பக்குவம்:

மைதாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரும், 50 கிராம் எண்ணெயும் சேர்த்து, கெட்டியாக பிசைய வேண்டும். பிறகு ஈரத்துணி கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும். பின்னர் எலுமிச்சை அளவு மாவை உருட்டி பரோட்டாவாக வீச வேண்டும்.  சுருட்டி உருட்டி, அடித்து இதையும் அரை மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். தோசைக்கல்லில் வெறும் பரோட்டாவை இருபுறமும்  சிறிது சுட்டு எடுத்த பின் மறுபடியும் மீதமுள்ள எண்ணெயை அளவாக ஊற்றி, மிதமான தீயில் சுட்ட பரோட்டாக்களைப் பொரித்து எடுக்கவும்.

கடைகளில் ‘எண்ணெய் பரோட்டா’வுக்கு என்று கேட்டு தரமான நைஸ் மைதாவை வாங்க வேண்டும். சாதா பரோட்டாவுக்கு மாவை சற்றுத் தளரவும் எண்ணெய் பரோட்டாவுக்கு கெட்டியாகவும் பிசைய வேண்டும். மாற்றிப் பிசைந்தால் பொரித்து எடுக்கும்போது எண்ணெய் குடித்துவிடும்.



Source link

www.dinakaran.com

Today's Feeds

சத்தான கஞ்சி

சத்தான கஞ்சி

0
செய்முறை: புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 கப் நீர் சேர்த்து, கருப்பு உளுந்து, வெந்தயம், சீரகம், நறுக்கிய...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading