போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

0
7

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாண அதிகாரிகள் ஏற்கனவே ஸ்மார்ட் கேமிராக்களை தெருக்களில் பொருத்த ஆரம்பித்துவிட்டனர். இவை சீட்பெல்ட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணுவதற்காக என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு மோட்டார்சைக்கிள் ஓட்டியும் தண்டிக்கப்பட மாட்டார்களாம். எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுவார்களாம். அதன் பின்னர், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு இருந்தால், 1033 ஆஸ்திரேலியன் டாலர்களும் (சுமார் ரூ.56,000), நான்கு தகுதி புள்ளிகளும் அவர்களுக்கு தண்டனைகளாக விதிக்கப்படவுள்ளன.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

இந்த அபராதமே ஆஸ்திரேலியாவில் விதிக்கப்படும் மிக பெரிய சாலை குற்றத்திற்காக விதிக்கப்படும் பண அபராதமாகும். சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு 413 ஆஸ்திரேலியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட உள்ளன.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

ஸ்மார்ட் கேமிராக்கள் சாலையில் கம்பத்திற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தன்னை கடந்து செல்லும் வாகனங்களையும் அதன் உள்ளே இருக்கு ஓட்டுனரையும் விண்ட்ஸ்க்ரீன் வழியாக படம் பிடித்து கொள்ளும். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், மொபைல் போனை கையில் வைத்திருக்கும் ஓட்டுனர்களை மட்டுமே சேமித்து கொள்ளுமாம்.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

மற்றவைகள் தானாக அழிந்துவிடும். சேமிக்கப்படும் படங்கள் உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போலீஸார் மேனுவலாக ஒவ்வொன்றையும் சரிப்பார்க்கவுள்ளனர். நம்மூரில் உள்ள வழக்கமான கேமிராக்களை போல் இந்த ஸ்மார்ட் கேமிராக்கள் இருக்காது.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

தன்னை கேமிரா ஒன்று கண்காணிக்கிறது என்பதையே சில மணிநேரங்கள் கழித்தே வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். இந்த ஸ்மார்ட் தொழிற்நுட்பம் இந்த ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு குயின்ஸ்லாந்தில் சோதனை செய்யப்பட உள்ளன.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டியை அடையாளம் காண கேமிராக்களை பயன்படுத்தும் உலகின் முதல் பகுதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆகும். செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய 2020 மார்ச் மாதத்திலேயே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.

போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

இந்த வசதியை கொண்டுவந்ததில் இரண்டாவது இடத்தில் தான் குயின்ஸ்லாந்து உள்ளது. அடுத்ததாக, ஸ்மார்ட் கேமிராக்களை பயன்படுத்தி சாலை குற்றங்களை 2023ஆம் ஆண்டில் இருந்து விக்டோரியா மாகாண அதிகாரிகளும் கண்டறியவுள்ளனர்.

Note: Images are representative purpose only.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here