Home தமிழ் News ஆரோக்கியம் மக்களே! உஷார்… இன்னும் 6 முதல் 8 வாரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரப்போகுதாம்… இந்த அலை எப்படி இருக்கும்? | Third COVID-19 Wave May Hit India In 6 To 8 Weeks: AIIMS Chief

மக்களே! உஷார்… இன்னும் 6 முதல் 8 வாரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரப்போகுதாம்… இந்த அலை எப்படி இருக்கும்? | Third COVID-19 Wave May Hit India In 6 To 8 Weeks: AIIMS Chief

0

[ad_1]

மூன்றாம் அலை நடத்தையைப் பொறுத்தது

மூன்றாம் அலை நடத்தையைப் பொறுத்தது

கொரோனா மூன்றாம் அலையானது நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்தது என்று எய்ம்ஸ் தலைவர் குலேரியா கூறினார். கொரோனாவின் புதிய அலை தாக்குவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகக்கூடும் என்று கூறப்பட்டாலும், பல்வேறு காரணிகளைப் பொறுத்து இது இன்னும் வேகமாக கூட தாக்கலாம் என்றும் குலேரியா கூறினார்.

கொரோனா பரவலை குறைக்கும் நெறிமுறைகள்

கொரோனா பரவலை குறைக்கும் நெறிமுறைகள்

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் போட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 108 கோடிக்கு கோவிட் தடுப்பூசி போடுவதை இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

சரியான சுகாதாரத்தைப் பராமரிப்பது, மாஸ்க்குகளை அணிவது போன்ற கொரோனா பரவலைக் குறைக்கும் விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருந்தால், கொரோனா மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படக்கூடும் என்று பல நிபுணர்களும் கூறுகின்றனர்.

கடுமையான கண்காணிப்பு அவசியம்

கடுமையான கண்காணிப்பு அவசியம்

கோவிட்டின் பொருத்தமான நடத்தையைத் தவிர, கடுமையாக கண்காணிப்பும் தேவை. கடந்த முறை, புதிய கொரோனா மாறுபாடானது குறுகிய காலத்தில் பல கொரோனா வழக்குகளுக்கு வழிவகுத்தது. இந்த வைரஸ் இன்னும் காலம் செல்ல செல்ல தொடர்ந்து மாறுபடும் என்பதால், அதிக தொற்றுள்ள பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு மிகவும் அவசியம் என்று எய்ம்ஸ் தலைவர் கூறினார்.

தடுப்பூசி மிகவும் அவசியம்

தடுப்பூசி மிகவும் அவசியம்

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் இருந்தால், வரும் மாதங்களில் கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனவே கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அனைவரும் கட்டாயம் முயல்வதோடு, அரசாங்கமும் மக்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாதவாறு வழி செய்தால் தான், மூன்றாம் அலையால் பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

வேகமான வைரஸ் உருமாற்றம்

வேகமான வைரஸ் உருமாற்றம்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின், இன்று வரை பலவாறு உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது மற்றும் இரண்டு அலைகளுக்கு இடையிலான இடைவெளியும் குறைந்து வருகிறது. இதனால் இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்றால், அது கொரோனாவின் நெறிமுறைகளை பின்பற்றுவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்.

மூன்றாவது அலையின் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்றாவது அலையின் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்றாவது அலையின் தீவிரத்தைத் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கோவிட் நெறிமுறைகள் பின்வருமாறு:

* 2 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் வயதானவர்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அதுவும் இரட்டை மாஸ்க் அணிந்து கொள்வது மிகவும் நல்லது மற்றும் பாதுகாப்பானது.

* மாஸ்க் அணிவதோடு, 6 அடி இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு தெரியாதவர்களுக்கு இடையே இடைவெளி மிகவும் அவசியம்.

* உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் அல்லது சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.

* மாஸ்க் அணியும் போது, அந்த மாஸ்க் மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்கு மறைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள். குறிப்பாக கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here