மணத்தக்காளி கீரை குழம்பு | Spinach lettuce broth

0
14
மணத்தக்காளி கீரை குழம்பு | Spinach lettuce broth


என்னென்ன தேவை?

மணத்தக்காளி கீரை – 1 கப்,
அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி – 3,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 4,
பச்சைமிளகாய் – 2,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
கடுகு,
கறிவேப்பிலை – சிறிது.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளி கீரையை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வேகவிட்டு ஆறவிடவும். மிக்சியில் தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகு சேர்த்து நன்றாக அரைத்து, வெந்த கீரையில் கொட்டி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி உப்பு போட்டு கீரை கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here